Saturday, August 17, 2013

Short story

சிறு கதை 
பொறுப்பைத் தட்டி விட்டா ,அது ஒரு கால கட்டத்தில் திரும்பி நம்மிடமே வந்து சேரும் என்பது நாம் வாழ்வில் நடந்த கடந்த கால நிகழ்வுகள் மட்டுமல்ல பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் சான்றுகளும் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நாளும் ஒரு பையன் வகுப்புக்குச் சற்று தாமதமாக வந்தான் .ஒரு நாள் ஆசிரியர் தினம் தாமதமாக வருகின்றாயே,ஏன் என்று சற்று கோபமாகக் கேட்க,அதற்கு பையன் பஸ் லேட்டா வருவதற்கு நான் என்ன செய்யமுடியும் என்று சொன்னான்.இந்த பிரச்சனையின் உண்மையான காரணத்தை அறிந்து தீர்வு காண விரும்பி மறுநாள் அந்த ஆசிரியர் அந்த பஸ் டிரைவரைப் பார்த்துதினமும் பஸ் ஏன் லேட்டா வருகின்றது” என்று கேட்டார்.அதற்கு பஸ் டிரைவர் “பஸ்ஸில் கூட்டம், எல்லோருக்கும் டிக்கெட் போட்ட பின்தான் அடுத்த ஸ்டாப்பிற்கு பஸ்ஸை எடுக்க முடியும்” என்று தெரிவித்தான்.”கூட்டம் அதிகமின்னா கூடுதல் பஸ் விடலாமில்லையா” என்று கேட்கஅது எங்கள் கையிலில்லை” என்று டிரைவர் சொல்ல,மறுநாள் ஆசிரியர் போக்குவரத்துக் கழக மேலாளரைப் பார்த்து கேட்டார்-அதற்கு அந்த அதிகாரி RTO அனுமதி அளித்தால்தான் நாங்கள் கூடுதல் பஸ் விடமுடியும் என்றார். ஆசிரியர் விடவில்லை. RTO விற்கு விண்ணப்பம் எழுதி அனுப்பி வைத்தார்.RTO அப்பகுதி சட்டமன்ற உறுப்பிரைக் கைகாட்ட, சட்டமன்ற உறுப்பிர் போக்குவரத்து துறை மைச்சரை கைகாட்ட, போக்குவரத்து துறை மைச்சர் முதலமைச்சரை கைகாட்ட,முதலமைச்சர் முதன்மைச்செயலரை ழைத்துக் கேட்க, முதன்மைச்செயலர் போக்குவரத்து துறை செயலரைழைத்துக் கேட்க, போக்குவரத்து துறை செயலர்,ட்டார சட்டமன்ற உறுப்பிர் லுகத்திற்கு கடிம் எழுதிவிவரம் கேட்க, சட்டமன்ற உறுப்பிர் லும் மாவட்ட ஆட்சியர் லுகத்தை ணுக, மாவட்ட ஆட்சியர் லும் ருவாய் துறையிம் விவரம் கேட்க ருவாய் துறை ஊர் தாசில்தாரை விவரம் கேட்க அவர் ளித்த பதில் மீண்டும் வந்தவழியைக் கந்து நீண் நாட்களுக்குப் பிறகு ஆசிரியருக்கு ஒரு கடிம் வந்தது.உங்கள் பள்ளியிலிருந்தும்,ஊர் மக்களிடமிருந்தும் முறையாக விண்ணப்பம் வரவில்லை. வரி வருவாய்,சாலை வசதி மிகுந்தால்  கவனிப்போம் என்று எழுதியிருந்தார்கள்..அந்தக் கடிதத்தின் நகலை லேட்டா வந்த மாணவனிடம் கொடுத்தார். 

No comments:

Post a Comment