Monday, August 19, 2013

Vethith thanimangal-Chemistry

அயோடின் கண்டுபிடிப்பு 

இது ஹாலஜன் குடும்பத்தைச் சேர்ந்தது.இதன் தோற்றமும் வேதிப்பண்புகளும் சற்று வித்தியாசமானவை.அயோடின் இயற்கையில் தனித்துக் காணப்படவில்லை.உலோகங்களுடன் சேர்ந்த கூட்டுப் பொருளாக பூமியிலும், கடலிலும் கிடைக்கின்றது.சில உப்பு நீர் ஊற்றுக்களில் இது காணப்படுவதுண்டு.ஆழ் கடல் தாவரங்கள் கடலிலிருந்து அயோடினை உட்கவர்ந்து கொள்கின்றன.இவற்றின் சாம்பலில் அயோடைடு கலந்திருக்கின்றது.

1811 ல் பிரான்சு நாட்டின் தொழில் முனைவோரான கோர்டாய்ஸ்(B.Courtois) என்பார் அயோடினைத் தற்செயலாகக் கண்டுபிடித்தார்.கடல் பாசிகளின் சாம்பலை நீரில் கரைத்து அதிலிருந்து பொட்டாசியம்,சோடியம் சேர்மங்களை (குளோரைடுகள்,கார்போனேட்டுகள்,சல்பேட்டுகள்) நீக்கினார்.கரைசலை ஆவியாக்க முதலில் சோடியம் குளோரைடு வீழ் படிய,அடுத்து பொட்டாசியம் குளோரைடு,பின்னர் சல்பேட்டுகள் வீழ்படிந்தன.எஞ்சிய நீர்மத்தில் கந்தகம் உள்ளிட்ட பல உப்புக்களின் கலவை இருந்தது.கந்தகக் கூட்டுப் பொருட்களைச் சிதைக்க,அதனுடன் சிறிதளவு கந்தக அமிலத்தைச் சேர்த்த்தார்.ஒருநாள் அளவுக்கு அதிகமாக அமிலத்தை எஞ்சிய நீர்மத்தோடு கலக்க எதிர்பாராத நிலையில் அதிலிருந்து நீலநிறப் புகை வெளிவந்தது.அதன் ம் முகம் சுழிக்க வைத்தது.இந்த ஆவி குளிர்ந்த பொருளின் மீது நீர்மத் துளியாக சுருக்கம் பெறாது,கருநீலப் படிகமாக,உலோகப் பொலிவுடன் படிந்தது.இதை மேலும் ஆராய்ந்து அதன் பல விந்தைப் பண்புகளை கோர்டாய்ஸ் தெரிவித்தார்.
கிரேக்க மொழியில் அயோடைஸ் என்றால் அவுரி நீலம் என்று பொருள். அதனால் இதற்கு பிரஞ்சு விஞ்ஞானிகள் அயோட என்று பெயரிட்டனர். பின்னர் ஆங்கிலத்தில் இது 
அயோடினா மாற்றம் பெற்றது.தூய அயோடினை பொட்டாசியம் அயோடைடு மற்றும் காப்பர் சல்பேட் இவற்றின் வேதியியல் வினையால் பெறலாம். இத்தனிமத்தைப் பெற பல வழிமுறைகளை இன்றைக்குப் பின்பற்றுகின்றார்கள்.
பண்புகள் 
I என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய அயோடினின் அணுவெண் 53,அணு எடை 126.90,அடர்த்தி 4930 கிகி/கமீ.இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 386.9 K,456.2 K ஆகும்.சாதாரண வெப்ப நிலையில் நமச்சலூட்டும் மணத்துடன் அவுரிநீலநிறப் புகையை கக்கி ஆவியாகின்றது.இது பல தனிமங்களுடன் கூடி சேர்மங்களை உண்டாக்கினாலும் பிற ஹாலஜன்களை விட வலிமை குறைந்தே ஈடுபடுகின்றது .அதனால் பிற ஹாலாஜங்கள் அயோடினை இடப்பெயர்ச்சி செய்து விடுகின்றன .

அயோடின் உலோகம் போன்று சில செயல்களை வெளிப்படுத்துகின்றது.இது குளோரோபாம்,கார்பன் டெட்ரா குளோரைடு,கார்பன் டை சல்பைடு போன்றவற்றில் உடனடியாகக் கரைகின்றது சூடுப்படுத்தப் பட்ட பொட்டாசியம் ,வெடிச் சத்தத்துடன் அயோடினுடன் இணைகின்றது .பொடி செய்யப்பட்ட ஆண்டிமணியை அயோடின் ஆவியில் தூவினால் எரிகின்றது .பாஸ்பரஸ் அயோடினுடன் தானாகத் தீப்பற்றிக் கொள்கின்றது .

No comments:

Post a Comment