Thursday, September 14, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

சூரிய ஆற்றல் தொழிநுட்பம் (Solar power technology)


தலைப்பு சூரிய ஆற்றல் தொழிநுட்பம்

வெளியீட்டாளர் : அல்லயன்ஸ், சென்னை

ஆண்டு : மே, 1989

மொழி : தமிழ்

கருப்பொருள்: சூரிய ஆற்றல் தொழில்நுட்பம்

பக்கங்கள்: 194 விலை : Rs.20

        இந்நூல் சூரியனைப் பற்றியும் ,சூரிய ஆற்றலைப் பற்றியும் பூமியில் அதன் செறிவாலும் சிதறலாலும் விளையும் செயல்கள் பற்றியும் விவரிக்கின்றது .சூரிய ஆற்றலை வெப்ப மற்றும் மின் ஆற்றலாகச் சேமிக்கும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன சூரிய அடுப்பு, சூரிய மின்கலன் சூரிய நீர் காய்ச்சி வடிப்பான் ,சூரிய நீர் இரைப்பான்  போன்ற தொழிநுட்பப் பயன்கள்  போதிய படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன  1990 ம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் தமிழ் நூலாகத் தேர்வு செய்யப்பட்டு 199l ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் திருவள்ளுவர் திருநாள் விழாவில்  தமிழக அரசால் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. அன்றைக்கு பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த  முனைவர் .வெங்கடராமன் தமிழக அரசின் விழாவில் தலைமை தாங்கி பரிசளிப்பு செய்தார்

 

                                                  மெ .மெய்யப்பன்   முனைவர் வெங்கடராமன் 

சூரிய ஆற்றல் தொழில் நுட்பங்களில் தொடக்கத்திலிருந்த ஆர்வம் நான் கல்லூரிகளில் பணியாற்றிய  போது இளமறிவியல் மற்றும் மூதறிவியல் மாணவர்களுக்கான சிற்றாய்வு களுக்கு  ஆதரவாக இருந்து பொருளைத் தந்தது ..School Science ,Vol 23,No.4, Dec 1985 இதழில் வெளிவந்த Life of the sun இதில் குறிப்பிடத்தக்கது. பணி நிறைவுக்குப் பின் கோவிலூரில் கல்விக் கூட  ஒருங்கிணைப்பாளராக சில காலம் பணியாற்றிய போது சூரிய ஆற்றல் அடுப்பு தயாரிக்கும் வழிமுறையை பாலிடெச்னிக் மாணவர்களுக்கு கற் பித்து செய்முறைப் பயிற்சியும் அளித்தேன் 

                                      Dr குமரப்பன்  ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஸ்வாமிகள் Dr மெய்யப்பன்

கிராமப்புறங்களில் அறிவியல் பரவலாக்கம் தொடர்பான இந்த முயற்சி மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வைத் தூண்டியது என்றால் மிகையில்லை. அப்போது மாணவர்கள்சூரிய அடுப்பைக் கொண்டு சக்கரைப் பொங்கல் சமைத்து எல்லோருக்கும் கொடுத்து அசத்தினார் கள். இது தொடர்பான செய்திக் குறிப்பு அப்போதைய நாளிதழ்களில் வெளிவந்தது. 


 

        2015 ல் உமையாள் இராமநாதன் பெண்கள் கல்லூரில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்து போது  சூரிய ஆற்றல் பயன்பாடு பற்றி மாணவ இளம் விஞஞானிகளுடைய அறிவியல் சாதனங்களை  மக்களிடம் காட்சிப்படுத்தி விளக்கம் கூற இந்திய அறிவியல் கழகம் அழைப்பு விடுத்தது . கடல் நீரை நன்னீராக்கும் சூரிய காய்ச்சி வடிப்பான், ஆலைக் கழிவுகளை சூரிய ஆற்றலைக் கொண்டு தூய்மைப் படுத்தும் சூரிய காய்ச்சி வடிப்பான்  என்று இரு சாதனங்களை வடிவமைத்து மாணவர்களைத் தயார் செய்து அனுப்பி வைத்தேன் .இதில் கடல் நீரை நன்னீராக்கும் சூரிய காய்ச்சி வடிப்பான் என்ற செய்முறைச் சோதனைக்கு முதல் பரிசு வழங்கினார்கள். இது பற்றிய செய்திக் குறிப்புகள் அப்போதைய நாளிதழ்கள் பலவற்றில் வெளியிடப்பட்டது. பரிசுத் தொகையை பாதியை சாதித்த மாணவர்களுக்கும் மீதியை இயற்பியல் ஆய்வகத்திற்கு வேண்டிய சில கருவிகளையும் வாங்கிக் கொடுத்தேன் 


   

No comments:

Post a Comment