Thursday, September 21, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

. கணித மேதையாக எண்களோடு விளையாடுவோம் -1.எண்கள்


தலைப்பு : கணித மேதையாக எண்களோடு விளையாடுவோம் -1.எண்கள்

வெளியீட்டாளர் அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு

ஆண்டு  ஜுலை   2020

ASIN பதிவு எண் BO8D8FZPHW

மொழி : தமிழ்

கருப்பொருள்: விளையாட்டுக் கணக்குகள்   

பக்கங்கள் விலை: 2 USD

 

          குழந்தைகளுக்குச் சுயமாகத் தன்னார்வத்துடன் சிந்திக்கும் பயிற்சி என்பது விளையாட்டும், விளையாட்டுக் கணக்குகளுமே.   துறை எதுவானாலும் பிற்காலத்தில் சிறந்து விளங்க இந்தப் பயிற்சி பெரிதும் பயனளிக்கிறது. சிதறும் சிந்தனைகளை ஒருமுகப்படுத்திச் சுயமாக வளப்படுத்திக் கொள்ள விளையாட்டுக் கணக்குகள் நற்பயனளிக்கின்றன.

         கணித மேதையாக எண்களோடு விளையாடுவோம் என்ற தலைப்பில் நான்கு நூல்கள் எழுதத் திட்டமிட்டேன் . அதில் முதல் நூல் எண்கள் பற்றியது .இரண்டாவது பிதகோரஸ் எண்களுடனும் ,மூன்றாவது பகா எண்களுடனும் ,நான்காவது  எண்களாலான சமன் தொடர்புகள் பற்றியவை. நான்கு நூலையும் எழுதி முடித்துவிட்டேன். என்றாலும் இதில் முதல் நூலை மட்டும் அமேசான் KDP மூலம் வெளியிட்டேன்.மூன்றாவது நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டேன். கோவிலூர் ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள்  இத் தலைப்பில் நான் எழுதிய நான்கு நூல்களையும்  வெளியிடலாம் என்று  ஒளியச்சுப் பிரதிகளை வாங்கிக்கொண்டார்கள். அவை பிற்ப்பதற்கு முன்பே இவர்கள் மறைந்துபோனார்கள் .

. இதில் எண்கள் தொடர்பான விளையாட்டுக் கணக்குகள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன.  இந்நூல் 22 தலைப்புகளில் கணிதப் புதிர்களை விடுவிக்கும் பயிற்சி  கொடுக்கின்றது அதன்  மூலம் ஏற்படும் சிந்தனை வளம்  புதிர்களைத் தீர்வுகாணும் முயற்சியை வலுப்படுத்துகிறது..                                         

No comments:

Post a Comment