Monday, September 18, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

அறிவூட்டும் ஆன்மிகச் சிறுகதைகள் Small stories in theology) 


தலைப்பு அறிவூட்டும் ஆன்மிகச் சிறுகதைகள் 

வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு

ஆண்டு : செப்டம்பர் 2021

ASIN பதிவு எண்: BO9GVLN2GY

மொழி : தமிழ்

கருப்பொருள் : ஆன்மிகம் ,சிறு கதை

பக்கங்கள் 53, விலை 1 USD 


          அப்போது குமுதம் என்ற தமிழ் வார இதழில் ஒரு பக்க க் கதைகள் வரும். அதன் முடிவு ஒரு திடீர் திருப்பமாக இருக்கும் . எனக்கும் அது போல கதைகள் எழுத  வேண்டும் என்ற ஆசை இருந்தது. கரு இருந்தது அனால் எழுதுவதில் இரண்டு சிக்கல்கள் இருந்தான். முதலாவது கதை கட்டுரை போலவே வந்தது.ஒரு பக்கத்திற்குள் அடக்கமுடியவில்லை. விரிந்து கொண்டே போனது. சில கதைகள் எழுதி தோற்றுப்போனேன்.முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது என்று கதை எழுதுவதையே விட்டுவிட்டேன். என்றாலும் சில நேரங்களில் கதை எழுதி என்னுடைய வலைத்தளத்தில் பதிவிடுவேன். ஆன்மிகம் எனக்கு விருப்பமானதாக  இருந்ததால் ஆன்மிகக் கருத்துக்களை கதை வடிவில் கூறும் முயற்சியில் இறங்கினேன். கொஞ்சம் வெற்றிகிடைத்தது . சுமார் 24 கருத்துகளுக்கு கதை வேஷம் போட்டேன் ..ஒவ்வொரு கதைக்கும் குறிப்புணர்த்தும் படத்துடன்  கதைக்கு அடிப்படையான கருத்தை நன்னெறி யாகவும் பின்னிணைத்துள்ளேன். இந்நூலின் இயற்பியல் அச்சுப் பாதிப்பை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது .

 


தலைப்பு : அறிவூட்டும் ஆன்மிகச் சிறுகதைகள்

வெளியீட்டாளர் : மணிவாசகர் பதிப்பகம் , சென்னை

ஆண்டு : மார்ச் 2022

மொழி : தமிழ்

கருப்பொருள்: ஆன்மிகம் ,சிறு கதை 

பக்கங்கள்:80விலை Rs.25

      நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் திருமாத்தாள் என்ற முன்னோர்களுக்கு படையல் செய்து  வணங்கி மகிழ்வோம் .அப்போது ஒவ்வொருவரும் சில பொருட்களை சாமிக்கு அளிப்பார்கள்  அது பின்னால் ஏலம் விடப்பட்டு அறக்கட்டளைக்கு வரவு வைக்கப்படும் . நான் சில ஆண்டு களாக என்னுடைய புதிய நூல்களைக் கொடுத்து வந்தேன். இந்த நூலின் நான்கு பிரதிகள்  அப்படி திருமாத்தாளுக்கு படைக்கப்பட்டது   .நூலை ஏலம் விடவேண்டாம் என்றும் நூலின் பதிப்பு விலையைவிட சற்றே கூடுதலான விலைக்கு  விருப்பமானவர்களை  முன் கூட்டியே தெரிந்து கொடுக்கவும் என்று கேட்டுக் கொண்டதால் அப்படியே செய்தார்கள்.

No comments:

Post a Comment