Saturday, September 30, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள்(Science of Diamonds)


 

தலைப்பு அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள்

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு  : நவம்பர் 1994

பதிவு எண் ISBN 81-234—0356—9, A -798

மொழி : : தமிழ்

கருப்பொருள் அறிவியல் , வைரங்கள்

பக்கங்கள்139 விலை Rs.25

 

            இந்நூல் வள்ளல் அழகப்பச் செட்டியார் அவர்களுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்துள்ளேன் . அவர் காரைக்குடியில் கல்விக்கூடங்களை எழுப்பியிருக்கா  விட்டால் நான் படித்திருக்கவே  முடியாது..தனது சொத்து செல்வம் அனைத்தையும் கல்விக்காக வழங்கிய இவரைப்போல வேறொரு மனிதரைப் பார்க்கவே முடியாது ,கடவுளே வாழ்த்திய ஒரு மனிதர் உலகில் உண்டென்றால் அது வள்ளல் அழகப்பச் செட்டியாராகத்தான் இருக்கும். இந்த நூல் எனக்குள் கிடைத்தபோது அதிலொரு பிரதியை அழகப்பச் செட்டியாரின் ஒரே மகளான உமையாள் ராமநாதன் அவர்களுக்குக் கொடுத்தேன். கோகினூர் போன்ற சில வைரங்களின் வரலாறுகளை ப் படித்திருக்கின்றேன். அவற்றோடு வைரங்கள் பற்றிய இயற்பியல் கருத்துக் களையும் இணைத்து ஒரு நூலாக வெளியிடலாம் என்று நினைத்தேன் . அப்போது எனக்கு கிடைத்த ஒரே மூலம் மிர் பதிப்பகத்தார் வைரம் பற்றி வெளியிட்ட ஒரு நூல்தான் . மேலும் விவரங்கள் சேகரிக்கக் காத்திருந்த வேளையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் படிக வளர்ச்சி மையத்தில் கோடைகாலப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன் . அப்போது செயற்கை வைரங்கள் உற்பத்தி பற்றிய விஷ்யங்களைத் தெரிந்து கொண்டேன். .இது அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் என்ற தலைப்பில் எழுத நினைத்த நூலை எழுதிமுடிக்க உறுதுணையாக இருந்ததுஇயற்கை வைரங்களுக்கு ஒரு அத்தியாயம் செயற்கை வைரங்களுக்கு ஒரு அத்தியாயம் என இரு அத்தியாயங்கள் உள்ளன.முதல் அத்தியாயத்தில் உலகப் புகழ் பெற்ற வைரங்கள் ,அவற்றோடு தொடர்புடைய கதைகளை விவரிப்பதுடன் ,வைரங்களின் சிறப்புப்பண்புகளையும் வைரங்கள் பூமியில் தோன்றிய விதத்தையும் விளக்கிக் கூறுகின்றது வைரங்களைப் பட்டை தீட்டுதல் , நிறமூட்டுதல் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றது .இரண்டாவது அத்தியாயம் செயற்கையாக வைரங்களை உற்பத்தி செய்யும் முறைகளை விவரிக்கின்றது  இந்த நூலுக்கு சிறந்த அறிவியல் தமிழ் நூலுக்கான பரிசு ஏன் கிடைக்கவில்லை என்று எனக்கு இன்றளவும்  தெரியவில்லை

 

No comments:

Post a Comment