Monday, September 11, 2023

 

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாக்கியங்கள்(Inspirational quotes guiding good life)

                      


        

        

                                     (1)                                     (2)                                      (3)

தலைப்பு : வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாக்கியங்கள்

வெளியீட்டாளர்: அமேசான் KDP ஒளியச்சு பதிப்பு 

ஆண்டு :              மே 2020                  மே  2020                           ஜூன் 2020

பதிவு எண்:ASIN  B0899SB5KY       B99TYMMF                        B08BJRB95Z

மொழி   தமிழ்

கருப்பொருள்: அறிஞர்களின் பொன்மொழிகளும் விளக்கவுரையும் 

பக்கங்கள்                95                                 98                                   92

விலை:                  5 USD                           5 USD                            5 USD

 

        சோம்பேறித்தனத்தை உதறிவிட்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட, உத்வேகத்தையும் ஊக்கத்தையும் தூண்டும் புகழ் பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகளைச் சேகரித்துப் படிப்பதில்  ஆர்வம் கொண்டுளேன்  2010 ஆம் ஆண்டு முதல் எனது வலைப்பதிவில் {drmmeyyappan.blogspot.com] எனது சொந்த விளக்கத்துடன் பல்வேறு துறைகளில் உள்ள பல உலகப் புகழ்பெற்ற நபர்களின்   மேற்கோள்களைக் குறிப்பிட்டு அதற்கு அறிஞர்களின் விளக்கத்தோடு என்னுடைய கருத்துக்களையும்  இணைத்து சொன்னதும் சொல்லாததும் என்ற தலைப்பில்  வெளியிட்டேன் அவை சேகரிக்கப்பட்டு 3 மூன்று மின் புத்தகங்களாக Amazon KDP இல் வழங்கப்பட்டுள்ளன.

        இளமைக்காலத்தில் முன்னேற்றத்திற்குத் தேவையாள தகுதியையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் வளர்த்துக் கொண்டுவிட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் அமைகின்றது  தனிமனிதர்களின் இந்த மகிழ்ச்சியும் இனிமையும் சமுதாயத்தில் பரவ , சமுதாயம் நிலைத்து வாழும் ஒரு வளர்முக சமுதாயமாக உருப்பெறுகின்றது  வாழ்க்கையின் இனிமையை  சொந்த அனுபவத்தினாலோ அல்லது மற்றவர்களின் அனுபவத்தைக் கற்றுக்கொள்வதன் மூலமோ, அவதானித்தல் மூலமாகவோ அல்லது அவர்களின் புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ பெறலாம். சிறந்த மனிதர்களின் பொன்னான வார்த்தைகள் இயற்கையான வாழ்க்கையை அதிகபட்ச இன்பத்திற்காகப் பின்பற்றுவதற்கான இயற்கையைப் புரிந்துகொள்ள நம் மனதைத் தூண்டுகிறது. முதல் புத்தகம் .பி.ஜே. அப்துல் கலாம் (இந்தியாவின் மக்கள் ஜனாதிபதி), அகதா கிறிஸ்டி (ஆங்கில மர்ம நாவலாசிரியர்), ஐசக் அசிமோவ் (பிரபல அறிவியல் புத்தக எழுத்தாளர்), ஆபிரகாம் லிங்கன் (இனவெறிக்கு எதிராகப் போராடிய அமெரிக்க ஜனாதிபதி), எட்வர்ட் விக்டர் ஆப்பிள்டன் (வளி மண்டல செய்திப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்த விஞ்ஞானி) ஆகியோரின் மேற்கோள்களை விவரிக்கிறது. விண்வெளித் தொடர்பைக் கண்டுபிடித்தவர்), லுட்விக் வான் பீத்தோவன் (இசைக்கலைஞர். , புரூஸ் லீ (கராத்தே கலைத் தற்காப்பு மாஸ்டர்), புத்தர் (புத்தர் மதத்தைக் கண்டுபிடித்தவர்) ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (திறமையான விவசாய நிபுணர்), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், (சார்பியலைக் கண்டுபிடித்த இயற்பியல் விஞ்ஞானி) போன்ற 10 அறிஞர்களின் பொன்மொழிகளைக் கொண்டுள்ளது

     இந்நூலில் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் கூறிய  பொன்மொழி வார்த்தைகள் நவீன உலகிற்குத் தேவையான மாற்றங்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கப்பட்டுள்ளன. இது இளம் மாணவர்களை சமூக வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தை மட்டுமல்ல, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறத் தேவையான தன்னம்பிக்கையையும் வளர்க்கத் தூண்டுகிறது. இரண்டாவது புத்தகம் அலெக்சாண்டர் பிளெமிங் (பென்சிலின் என்ற ஒரு ஆண்டிபயாட்டிக் மருந்தைக்  கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞானி,  ரிச்சர்ட் பிலிப்ஸ் பெய்ன்மேன் (இயற்பியல் விஞ்ஞானி) மகாத்மா காந்தி (ஆக்கிரமிப்பின்றி அமைதி வழியில்  சுதந்திரத்திற்காகப் போராடிய இந்தியாவின் தந்தை) ,கெர்ட்ரூட் ஸ்டெய்ன் (அமெரிக்க நாவலாசிரியர்),ஜான் மில்டன் (சொர்க்கத்தின் இழப்பு என்ற  ஆங்கிலக் கவிதையை எழுதிய கவிஞர்), காமராஜர் (தமிழ்நாட்டின் நேர்மையான முதல்வர்) ,கண்ணதாசன் (தமிழ்க் கவிஞர்) ,கோபி ஆனன் (ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர்) ,லீ குவான் யூ (ஒட்டுமொத்த தேசத்தையும் கட்டியெழுப்பிய சிங்கப்பூரின் தந்தை), மார்ட்டின் லூதர் கிங் (இனத்திற்காகப் போராடிய அமெரிக்க நீக்ரோ தலைவர்) , நெல்சன் மண்டேலா (தென்னாப்பிரிக்கத் தலைவர்), மற்றும் ஜான்.எப்.நாஷ் (அமெரிக்க கணிதவியலாளர்) ஆகியோரின் மேற்கோள்களை விவரிக்கிறது.

         பிரபலமான தலைவர்களின் பொன்னான வார்த்தைகள் அவர்களின் வார்த்தைகளைக் கொண்டே விளக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் போது வழக்கைக்குத் தேவையான மகிழ்ச்சியும் மனஅமைதியும் நிச்சியமாகக் கிடைக்கின்றன   இயற்கைக்கு மாறான முயற்சிகளை மேற்கொள்ளும்போது நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறோம். அவர்களின் மறக்க முடியாத வார்த்தைகளைப் படிக்க இதுவே சரியான நேரம். இந்த தலைப்பின் மூன்றாவது புத்தகம் ஜவஹர்லால் நேரு (இந்தியப் பிரதமர்), ஆல்பிரட் நோபல் (டைனமைட் தயாரித்து நிறைய சம்பாதித்து. நோபல் பரிசை உருவாக்கி  உன்னதமான முறையில் செலவிட்டவர்), ஸ்டீபன் ஹாக்கிங் (ஐன்ஸ்டீனுக்குப் பிறகு நன்கு அறியப்பட்ட விஞ்ஞானி. ஊனமுற்றவர்) டாக்டர்.வி.ராதாகிருஷ்ணன் (இந்தியாவின் ஜனாதிபதியான ஒழுக்கமான ஆசிரியர்), சர்.சி.வி.ராமன் (நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர்) . லியோ டால்ஸ்டாய் (ரஷ்ய சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர்), சச்சின் டெண்டுல்கர் (இந்திய கிரிக்கெட் வீரர்), ரவீந்திர நாத் தாகூர் (இந்திய தேசிய கீதத்தை எழுதிய இந்தியக் கவிஞர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்), சுவாமி விவேகானந்தர் (இந்து மத பணியாளர், சமூக சீர்திருத்தவாதி), அடெல் பிஹாரி வாஜ்பாய் (இந்திய ஜனாதிபதி) ஆகியோரின் மேற்கோள்களை விவரிக்கிறது.

No comments:

Post a Comment