Saturday, September 23, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 .ஆய்வுக் கூடத்திலிருந்து சமையற் கூட

 


தலைப்பு : ஆய்வுக் கூடத்திலிருந்து சமையற் கூடம் வரை

வெளியீட்டாளர் : வானதி பதிப்பகம்

ஆண்டு : நவம்பர் 2006

மொழி : தமிழ்

கருப்பொருள் அடிப்படை இயற்பியல்:

பக்கங்கள் 192 விலை Rs.60

            இன்றைக்கு அறிவியல் நம் வீட்டு அடுப்படிகளுக்குள்ளும் புகுந்திருக்கின்றது .நகர் புறங்களில் சமையற் கூடங்கள் புதிய சாதனங்களின் பொருட்காட்சியோ என்று வியக்கும் வண்ணம் ஒரு புதிய வடிவம் பெற்று வருகின்றன .விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புக்கள் போய் எரிவளிம அடுப்பு,நுண்ணலை அடுப்பு, மின்னடுப்பு , இண்டக்க்ஷன் ஸ்டவ்   பயன்படுத்தப்படுகின்றன . எதிகாலத்தின் சூரிய அடுப்புகள் பயன்படுத்தப்படலாம் .ஆட்டுக் கல்லுக்குப் பதில் மாவாட்டும் இயந்திரம் ,மிக்சி மண் பானைக்குப் பதில் பிரஷர் குக்கர்,உணவுப் பொருள் ஒட்டாத பாத்திரங்கள் ,குளிர் சாதனப் பெட்டி , காய்கறிகளின் தோல் நீக்கி, பொடியாய் வெட்ட வெட்டுங் கத்தியுடன்கூடிய மேடை, சப்பாத்தி மற்றும் பூரி மேக்கர் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது .உணவுப்பண்டங்களை பாதுகாக்கும் முறைகள்,குடிநீரைத் தூய்மையாகப்  பெறும் வழிமுறைகள் , அயோடின் உப்பு ,நார்சத்து ,காளான் மற்றும் சோயா பீன்ஸ் உணவின்  தேவை தொடர்பான ஆய்வுக்கு குறிப்புக்களுடன்   தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நூலை எழுதுவதற்குத் தேவையான அடிப்படை விஷயங்களை சயன்ஸ் ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்திகள்  மூலமே சேகரித்தேன். இந்நூலுக்குச்  சில விவரங்களை  வழங்கியதால் என் மகனை ஒரு துணை ஆசிரியராக நானே அனுமதித்துக் கொண்டேன்

3

No comments:

Post a Comment