Sunday, September 17, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

நிறம் மாறும் சொற்கள்                                                      



தலைப்பு நிறம் மாறும் சொற்கள்

வெளியீட்டாளர் : வானதி பதிப்பகம் ,சென்னை

ஆண்டு: டிசம்பர் 2005

மொழி  தமிழ்

கருப்பொருள்: கலைச் சொல்லாக்கம், பழைய சொல்லும் புதிய பொருளும் 

பக்கங்கள்: 256 விலை Rs.80 

        1980-90 களில் நான் ரீடர்ஸ் டைஜஸ்ட் எனும் ஆககில மாத இதழுக்குச் சில ஆண்டுகள் சாந்தா செலுத்தினேன் . அப்போது அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சிறிய இலவச நூலொன்றைப் பரிசளிப்புச் செய்தார்கள் . ஒருமுறை நிக்கோலஸ் ஜோன்ஸ் எழுதிய Hackers,Hotting and Hooray Henrys என்ற நூலின் ரீடர்ஸ் டைஜஸ்ட் பதிப்பு கிடைத்தது. முதலில் எனக்கு அதைப்படிப்பதில் விருப்பமில்லாமலிருந்து. கலைச் சொல் உருவாக்கம் அவற்றைப் பரவலாக்கம் செய்வேண்டிய அவசியம் எனக்கும் ஏற்பட்ட போது இந்தப் புத்தகத்தைத் தற்செயலாகப் படித்தேன். ஒரு சொல்லுக்குப் பல பொருண்மைகள் இருப்பதுண்டு . ஆனால் இந்நூல் ஒரு பழைய சொல்லுக்குப் புதிய பொருளைக்கற்பிக்கலாம் என்பதைப் பல எடுத்துக்காட்டு களுடன் விவரிக்கின்றது. அக்கருத்துக்களோடு   நான் நீண்ட காலமாக மொழிபெயர்புச் செய்தபொழுதும் ,அறிவியல் தமிழ் நூல்களை எழுதும் போதும்  நானே உருவாக்கிய  புதிய கலைச்சொற்களையும் இணைத்துக்கொண்டு எழுதிய நூலே இது. இதில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயம் மொழி வளர்ச்சியின் அவசியத்தைத் தெரிவிக்கின்றது .விலங்கினங்களால் உருவாக்கப்பட்ட கலைச் சொற்கள் , நிறங்கள் தந்த கலைச் சொற்கள் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாயம் பழைய சொற்களுக்கு புதிய பொருள் என்ற தலைப்பில் 113 சொற்களை விவரிக்கின்றது. கலைச்சொல்லாக்க நெறிமுறைகளில் இது ஒரு புதிய வளர்ச்சியைக் காட்டியிருக்கிறது .மூன்றாவது அத்தியாயம் தமிழில் புதுமையாக்கம் பற்றி ஒரு சிறிய கட்டுரையாக உள்ளது

 

No comments:

Post a Comment