Monday, September 18, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

தெய்வீக கீதையில் திருவள்ளுவம் (Bhagavad Geetha and Thirukkural )

 


தலைப்பு: தெய்வீக கீதையில் திருவள்ளுவம்

வெளியீட்டாளர் வானதி  பதிப்பகம், சென்னை

ஆண்டு: ஆகஸ்ட்  1999

 மொழி  தமிழ்

கருப்பொருள்: தமிழ் இலக்கியக் கட்டுரைகள்

பக்கங்கள்: 208 விலை Rs.40 

          1996 ஆம் ஆண்டு கல்வியாண்டின் தொடக்கத்தில் தொழில் ரீதியான மன அழுத்தத்தில் எனக்கு இதயத் தாக்கம் ஏற்பட்டது .மதுரையிலுள்ள ஓரியண்ட் ஹாஸ்பிட்டலில்  15 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய அறுவைச் சிகிச்சை ஏதும் தேவையில்லை என்றும் மருந்து மாத்திரைகளில் குணமாகிவிடும் என்றும் மருத்துவர்கள் சொன்னனதால் எல்லோருக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. என்னுடைய 50 வது பிறந்தநாளை மருத்துவ மனையில் கொண்டாடினேன் .சிகிச்சைக்குப் பின் ஏறக்குறைய ஒரு மாத காலம் முழு ஓய்வில் இருந்தேன் உடல் ஓய்வெடுத்துக் கொண்டாலும் மனம் ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை.         

          இயற்பியல் தவிர்த்து ஆன்மிகத்தில் ஏதாவது நூல் எழுதவேண்டும் என்று நினைத்தேன். நூல் எழுதவேண்டும் என்றால்  அதற்குரிய பொருள் தெரிந்திருக்க வேண்டும் அல்லது  தேவையான பொருளைத் தரக்கூடிய நூல்கள் இருக்கவேண்டும் . என்னிடம் பகவத் கீதை பற்றி நான்கு நூல்களும் ,திருக்குறள் பற்றி பல நூல்களும் இருந்தன. அவ்வப்போது தேவைப்படும் விஷயங்களுக்காக மட்டும் அவற்றைப் படிப்பேன். இப்பொழுது அவற்றை ஓரளவு முழுமையாகப்   படிப்பதற்குத் தேவையும் இருந்தது நேரமும் கிடைத்தது. இந்த இரு நூல்களும் சமுதாய நலன் கருதி தனிமனிதனுக்காக எழுதப்பட்டவை. மனத்தைக் கட்டுப்படுத்தும் மந்திரத்தை உபதேசிப்பது பகவத் கீதை என்றால் ,வாழ்க்கையின் ஒழுக்கத்தைக் கற்பிப்பது திருக்குறள் .நாடு ,மொழி  இவரைக்கடந்து உலகோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல்களுள் எவை இரண்டும் முதன்மை யானவை. மன அமைதியுடன் இரு நூல்களையும் படித்து கருத்துக்களை உளவாக்கிக் கொண்டு ஆழமாகச் சிந்தித்த போது அவையிரண்டும் ஒரே கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் கூறியிருப்பதை அறிந்து கொண்டேன்..இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை .ஏனெனில் இரு நூல்களில் கருத்துக்களுக்கு ஒரே இயற்கையே காரணாமாக இருக்கின்றது . இயற்கையில் உண்மைகள் மட்டுமே உண்டு போலிகள் இல்லை ,நிஜங்கள் உண்டு நிழல்கள் இல்லை .இயற்கை தந்த அனுபவங்களை கருத்தாக வடிக்கும் போது வார்த்தைகள் வேண்டுமானால் மாறலாம் அனால் உள்ளார்ந்த பொருளில் வேற்றுமை இருப்பதில்லை . இந்த அடிப்படியில் இவ்விரு நூல்களின் கருத்தொற்றுமையை விரிவாக அலசினேன் .அதன் விளைவே இந்த நூல்.இதில் ஒரு நெடிய முன்னுரையுடன் 10 அத்தியாயங்கள் உள்ளன.அர்ச்சுனனின் மனக்குழப்பத்திற்கான காரணத்தை ஆராய்ந்துரைக்கின்றது.வலிமையுள்ளவனே வாழ்வான் என்ற கருத்தை மெய்ப்பிக்கிறது .உயிரின் தத்துவம் ,மறுபிறப்பு, அறநெறி வழுவாமை யின் அவசியம் ,வினைப்பயன் கருதா வினைகளின் பலன் ,ஆசையற்ற நிர்வாணமான மனநிலை ,மனதை ஒருமுகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் ,முயற்சிகளில் முக்கியத்துவம் , தவறான நாகரிக வளச்சியின் பின் விளைவுகள் பற்றி விவரிக்கின்றது   

No comments:

Post a Comment