Sunday, September 17, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

கேளாவொலி - இயற்பியல்,மருத்துவம் ,பொறியியலில் (Ultra sound in Physics, Medicine and technology)


தலைப்பு : கேளாவொலி - இயற்பியல்,மருத்துவம் ,பொறியியலில்

வெளியீட்டாளர் : மணிவாசகர் பதிப்பகம் , சென்னை

ஆண்டு : அக்டோ பர்  2008

மொழி  தமிழ்

கருப்பொருள்: அறிவியல் ,தொழிநுட்பம்

பக்கங்கள் 112  விலை Rs.40

 

     1972  டிசம்பர் முதல் 2005 மே வரை தமிழக அரசுக் கல்லூரிகளில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவுடன் தனியார் பொறியியற் கல்லூரிகளிலிருந்து அறிவியல் துறைக்கு தலைமை ஏற்கும் அழைப்பு  கிடைத்தது. .ஓய்வு பெற்ற மறுநாளே சுதர்சன் பொறியியற் கல்லூரியில் சேர்ந்தேன். கலைக்கல்லூரிகளில் மூதறிவியல் பாடங்களை கற்பித்துக் கொண்டிருந்த எனக்கு பொறியியல் கல்லூரி புதிய அனுபவத்தைத் தந்தது .இயற்பியல் பாடங்கள் தொழில் நுடபத்துடன் பயன்பாட்டு அறிவியலாக இருந்தன. குறிப்பாக லேசர் கேளாவொலி ,ஒளியியற் இழைகள் ,போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்நூல் கேளாவொலியைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் தெரிவிக்கின்றது. முதல் அத்தியாயம் இயற்பியலில் கேளாவொலி  என்ற தலைப்பில் உற்பத்தி முறைகள் ,கேளாவொலி உணர் கருவிகள் மற்றும் சாதனங்கள், புதிய பயன்பாடுகள் பற்றி விவரிக்கின்றது .இரண்டாவது அத்தியாயம் பொறியியற் துறைகளில் கேளாவொலியின் பயன்பாடாகச் செய்திப்பரிமாற்றம் ,கலவை பிரிதல் ,பற்றவைப்பு ,படிகமாக்கம். அழிவற்ற சோதனை முறை ,போன்றவை தெரிவிக்கப் பட்டுள்ளன மூன்றாவது அத்தியாயம் மருத்துவத்துறையில் கேளாவொலியின் பயன்பாடுகளை  விவரிக்கின்றது  . இரத்த ஓட்டத்தை அறிதல் , வெப்பச் சிகிச்சை ,சிறுநீரகக் கற்களை பொடித்து அழிக்கும் சிகிச்சை முறை ,கேலாவொலி பிம்பங்காட்டி போன்றவை போதிய படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அரசாங்கம் மிர் பதிப்பகம் மூலம் பல அறிவியல் ,கலை ,தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் பற்றிய எண்ணற்ற நூல்களை மலிவு விலைக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூலம் விற்பனை செய்தார்கள். அப்போது நான் நிறைய புத்தகங்களைக் கொள்முதல் செய்தேன். அதில் ஒரு புத்தகம்  கேளாவொலி பற்றியது .இந்நூலை எழுதுவதற்கு அந்நூல் பெரிதும் துணை புரிந்தது

  

No comments:

Post a Comment