Tuesday, September 26, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

. வேடிக்கையாய் விஞஞானம் கற்போம 

 


 

தலைப்பு: வேடிக்கையாய் விஞஞானம் கற்போம்  - மொழிபெயர்ப்பு நூல்

வெளியீட்டாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு டிசம்பர்  2006

ISBN 81-234-1088-3

மொழி : தமிழ்

கருப்பொருள் அறிவியல் விளக்கம்

பக்கங்கள் 160 விலை Rs.60

 

          நான் NCBH மூலம் வெளியிட்ட பல பொது அறிவியல் நூல்களை அறிந்து அவர்கள் எனக்கு பல அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்கள் .அதிலொன்று " Fun and Science at Home “ என்ற தலைப்பில் ஜோதி பன்சாலி ,பேராசிரியர் எல் .எஸ்.கோத்தாரி  எழுதிய நூலாகும். இது எளிய சோதனைகள் மூலம் வீட்டில் விஞ்ஞானம் கற்றுக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிவிக்கின்றது. அறிவியல் நூல்களை மொழிபெயர்க்கும் போது நாம் பல கலைச்சொற்களைத் தெரிந்து கொள்வதோடு பல புதிய கலைச் சொற்களை உருவாக்கும் நெறிமுறைகளையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றோம்  . மொழிபெயர்ப்புப் பணி  படைப்பாற்றலின் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்துகின்றது. அந்த அனுபவத்தின் பயனை பின்னாளில் நான் தெரிந்துகொண்டேன்       

            இதில் காற்று, நீர்,ஒலி ,ஒளி ,விசைகள் , வெப்பம் இயல் வாழ்க்கை ஒளியியல் மாயத் தோற்றங்கள் என 8 பகுதிகள் உள்ளன,.காற்றில் காற்றோடு தொடர்புடைய 12 பரிசோதனைகள்,நீரில் நீரோடு தொடர்புடைய 13 பரிசோதனைகள் ஒலியில் , ஒலியோடு தொடர்புடைய 11 பரிசோதனைகள் ,ஒளியில் ஒளியோடு தொடர்புடைய 20 பரிசோதனைகள் ,விசையில் ,விசையோடு தொடர்புடைய 19 பரிசோதனைகள் ,வெப்பத்தில் வெப்பத்தோடு தொடர்புடைய 9 பரிசோதனைகள், இயல் வாழ்க்கையில் ,நம் அனுபவங்களோடு தொடர்புடைய 13 பரிசோதனைகளுடன் கண்ணுக்கு பொய்மைத் தோற்றம் தரும் ஒளியியல் மாயத் தோற்றங்கள் பற்றி இந்நூல் விவரிக்கின்றது. . இதில் கூறப்பட்டுள்ள சோதனைகள் அனைத்தையும் வீட்டில் நாமே செய்து பார்த்து புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கப் பட்டுள்ளது சின்னப் பிள்ளைகள் அறிவியலின்பால் சுயவிருப்பம் கொள்ள இந்நூல் ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

 


No comments:

Post a Comment