Friday, September 15, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

ஊழல் -பிரச்சனைகளும் தீர்வுகளும் (Corruption – the problem and solutions)


தலைப்பு ஊழல் -பிரச்சனைகளும் தீர்வுகளும்

வெளியீட்டாளர்: அமேசான்  ஒளியச்சு வடிவ நூல் 

ஆண்டு : மே 2021

பதிவு எண் ASIN:B092HFTDTB

மொழி   தமிழ்

கருப்பொருள்: ஊழல் பற்றிய சிந்தனைகள் 

பக்கங்கள் 188  விலை 9.50 USD

           ஊழலும் இலஞ்சமும் நாட்டின் தடையில்லாத முன்னேற்றத்திற்கு நிரந்தரமான தடைகள் என்பதால் எனக்கு அவற்றில் சிறிதும் விருப்பமில்லை.என்னால் அவற்றைத் தடுத்து நீக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது அதை எதிர்த்து கருத்துக்களை பதிவிடுவேன்.ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி பதவி ஏற்றவர்கள் எல்லோரும் ழலை அதிகம் செய்தவர்களாகவே இருந்தார்கள். ஊழலால் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அரசியலில் அதிகம் என்பதால் பொது மக்கள் எல்லோரும் அரசியல் வாதிகளாக விரும்பி   தவறு செய்கின்றார்கள். அதனால் ஊழல் பற்றிய என்னுடைய கருத்துக்களைத் தொகுத்து ஒரு நூல் வெளியிட வேண்டும் என்று விரும்பினேன் . என்னுடைய நீண்ட நாள் ஆசை இந்த நூல் மூலம் நிறைவேறியது

        இந்நூல் நான்கு அத்தியாங்களைக் கொண்டுள்ளது.முதல் அத்தியாயம் இந்தியாவில் நிகழ்ந்த ,தொடர்ந்து நிகழும் ஒருசில ஊழல்களைப் பற்றி ஒரு குறிப்புரை வழங்குகின்றது இதில் ஊழலுக்கும் அரசியவாதிகளுக்கும் உள்ள நெருக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது .எங்கெங்கு பணம் அதிகமாகக் கையாளப் படுகின்றதோ  அங்கெல்லாம் அரசியல்வாதிகள் உட்புகுந்து ஊழல் செய்கின்றார் கள் .ஊழல்வாதிகளே இங்கு ஆள்பவர்களாக இருப்பதால் ஊழல் ஒழிப்பு என்பது என்றைக்கும் ஒரு நாடகமே என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. ஊழலின் மற்றொரு முகம் இலஞ்சம் .அரசு அதிகாரிகளால் இது எப்படி மேற்கொள்ளப்படுகின்றது அது சமுதாயத்தில்  ஏற்படுத்தும் தாக்கம்  என்ன என்பதைப் பற்றி வி ளக்கிக் கூறுகின்றது. மக்களால் மக்கள் ஏமாற்றப்படுவதும் ஒருவகையில் ஊழலே .சமுதாயத்தில் ஊழல் பரவுதலை ஊடகத்தில் வெப்பம் பரவுதலோடு ஒப்பிட்டு விளக்குகின்றது 

            .இரண்டாவது அத்தியாயம் ஊழல் பெருகி வருவதற்கான காரணங்களை ஆராய்கின்றது .மக்களிடம் பெருகிவரும் வேலை வாய்ப்பின்மையும்  கூடவே வரும் வறுமையும் ,தகுதியில்லாதவனின் நம்பமுடியாத முன்னேற்றத்தையும் ,சட்டத்தால் தண்டிக்கப்படாததையும்  பார்த்து அதுவே சமுதாயத்தின் நெறி போலும் என்று நம்பி  மறைவொழுக்க நடவடிக்கைகளுக்கு ஆசைப்படுகிறான்  . அரசியல்வாதிகளின் நேர்மையின்மை ,கடமைஆற்றாமை  அளவற்ற ஆசை ,,மக்களிடம் அதிகாரமின்மை ,கல்வியிலும் உழைப்பிலும் நம்பிக்கையின்மை போன்றவைகளும் ஊழலுக்கான காரணங்கள் என்று தெரிவிக்கின்றது       

        மூன்றாவது அத்தியாயம் ஊழலால் விளையும் கேடுகளைப் பற்றி விவரிக் கின்றது .'கல்வியிலும் உழைப்பிலும் உள்ள நம்பிக்கையினை வேரறுக்கின்றதுவறுமையின் ஆதிக்கத்தால் மக்களிடையே .குடிப்பழக்கம்  பெருகுகின்றதுஉழைக்க மறுப்பு ,காவல் மற்றும் நீதித்துறைகளின் மீது அவநம்பிக்கை ,தகுதி யற்றோரின் பெருக்கம் ,நாட்டின் வளத்தைச் சுரண்டுதலும் வீணடித்தலும் போன்றவற்றால் ஏற்படும் தீங்குகளை பற்றி விவரிக்கின்றது 

          நான்காவது அத்தியாயம் ஊழலை ஒழிக்க இனிச் செய்ய வேண்டியதென்ன என்பது பற்றி த் தெரிவிக்கின்றது .போதுமென்ற மனம் , ஆசைக்கும் அளவு வைத்தல் ,,எல்லோருக்கும் வேலை வாய்ப்பும் ,கல்வியும் , உரிமையும் நாட்டின் வளர்ச்சியில் எல்லோருக்கும் பங்களிப்பு , பொருளாதார்ச் சமநிலை, நல்ல கல்வி , அறியியலில் முன்னேற்றம் , தொழிதுறைகளில் புதுமை புகுத்தி வளர்ச்சி  மக்களின் மறைவொழுக்க நடவடிக்கைகளைக் கண்கானித்துத் தடுத்தல்,, நாட்டின் வளத்தை பயனுறு திறனுடன் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது

   பழங்காலத்தில் ஊழல் இல்லை . ஊழல் என்ற சொல் கூட இல்லை.ஆனால் இன்றைக்கு ஊழல் புற்றீசல் போல சமுதாயத்தில் பெருகிவிட்டது .அதை சமுதாயத்தின் நலன் கருதி கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது .திருவள்ளுவர் இன்றைக்கு நம்முடன் வாழ்ந்திருந்தால் நிச்சியம் ஊழலுக்காக ஒரு அதிகாரம் படைத்திருப்பார் .இந்நூலின் இறுதியில் ஊழல் அதிகாரம் என்று 10 குறள்பாக்களையும் இனைத்துள்ளேன்

 ஊழல்  அதிகாரம்

 ஊழல் இவ்வுலகில் உள்ளவரை இல்லை

உயர்வு எந்நாளும் இனி

 ஊழல் மறுப்போர் உழைப்போர் மற்றோர்க்கு 

ஊழலே உயிர் வாழ்க்கை

 ஊழல் புரிந்து உயிர்வாழ்வதைவிட பிச்சை

எடுத்துப் பிழைப்பது மேல்

 யாவர்க்கும்  உய்வுண்டாம் உய்வில்லை

ஊழல்  புரிந்த மகற்கு 

 கசையடி  களவுக்கு ஒன்று கொள்ளைக்கு

நூறென்றால் ஊழலுக்கு ஆயிரம்

 ஊழல்  வளர சாகாத சமுதாயம்

தானாய் மறையுமே மடிந்து

 உயிற்பாலது ஓரும்  ஊழலே நல்லரசிற்கு

செயற்பாலது ஓரும் ஊர்க்காவல்

 ஊழலும் இலஞ்சமும்  சமுதாய வாழ்க்கைக்கு

ஊட்டும் நஞ்சும் நாற்றமும்

 ஊழல் மறுப்பு அமரருள் உய்க்கும் விருப்பு

ஆரிருள் உய்த்து விடும் 

நேயமின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குலமே கொள்ளும் நாசம்

 

No comments:

Post a Comment