Friday, September 15, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

திருக்குறளின் திருக்குரல் (Gospel of Thirukkural)


 தலைப்பு : திருக்குறளின் திருக்குரல்

வெளியீட்டாளர்: செல்வி பதிப்பகம், காரைக்குடி 

ஆண்டு ஏப்ரல் 2006

மொழி  தமிழ்

கருப்பொருள்: இலக்கியம், திருக்குறள் சிந்தனைகள் 

பக்கங்கள்:144 விலை Rs.50

          இந்நூல் திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் கூறப்பட்டுள்ள 10 குறள்பாக்களை மட்டுமே எடுத்துக்கொண்டு கடவுளைப் பற்றிய திருவள்ளுவரின் சிந்தனைகளை ஆராய்ந்துரைக்கின்றது .இதில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன . முதல் பகுதி  திருக்குறள் பற்றிய ஒரு சிறிய அறிமுக முன்னுரை. இரண்டாம் பகுதி தமிழ் சமுதாயத்தில்  கடவுள் எவ்வாறு வாழ்கின்றார்  என்பதை கடவுளின் பரிணாம வளர்ச்சியால்  விவரிக்கின்றது. ஆன்மிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக்கூறி   அதன் மறுமலர்ச்சியின் அவசியத்தை வற்புத்து கின்றது  சாகாத சமுதாத்திற்கு இந்த ஆன்மிகமே உயிர்நாடி என்ற கருத்தை  ஆன்மிகத்தால் விளையும் சமுதாய நலன்கள் மூலம் எடுத்துரைக்கின்றது  மூன்றாம் பகுதி குறளில் இறைவனைப் பற்றி கடவுள் வாழ்த்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஆராய்ந்து இறைவனை வள்ளுவர் இயற்கையாகப் பார்க்கின்றார் என்று முடிவு செய்கின்றதுஇந்நூல் காரைக்குடியில் உள்ள செல்வி பதிப்பகம் வெளியிட்டது.குறளின் உயர்வான கருத்துக்களுக் காக உயர்திணை அடைமொழியான திரு சேர்க்கப்பட்டு திருக்குறளானது திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்தாகும்.வள்ளுவரின் தெய்வீகக் கருத்துக்களுக்காக இந்த உயர்திணை அடைமொழியாக இணைக்கப்பட்டு குரல் திருக்குரலாகி நூலில் தலைப்பு திருக்குறளின் திருக்குரல் ஆனது

No comments:

Post a Comment