Friday, September 29, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 50.புள்ளியியல் கொள்கையும் இயற்பியலும்

 


தலைப்பு புள்ளியியல் கொள்கையும் இயற்பியலும்

வெளியீட்டாளர் அழகப்பா பல்கலைக் கழகம்  

ஆண்டு  2002

மொழி : தமிழ்

கருப்பொருள் : புள்ளியியற் கொள்கை  

பக்கங்கள் 222 விலை Rs.125 

            சில சமயம் அரசாங்கம்  மக்களிடம் நல்ல பெயர் சம்பாதிக்க நினைத்து பல்கலைக்கழகங்களுக்கு பொருளுதவி செய்து உயர் கல்விக்குரிய பாடநூல்களைத் தமிழில் எழுத ஆணையிடும். திட்டச் செலவை செலவழிக்க பல்கலை.க்கழகங்களும் சில முயற்சிகளை எடுத்துக்கொள்ளும் .அறிவியல் தமிழின் தமிழின் வளர்ச்சி நூலாக்கங்களில் மட்டுமில்லை. அதன் இயல்பான பரவலாக்கம் ,சார்புத் துறை களின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு இவற்றோடும் தொடர்புடையதாக இருக்கின்றது. மாணவர்களிடம் அறிவியல் தமிழின் தேவையைத் தூண்டாமல் அறிவியல் தமிழ்நூல்களை எழுதுவது பெரிய அளவில் பயன் தருவதில்லை   

        நான் அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக அண்ணா பல்கலைக் கழகத்தின் படிக வளர்ச்சி மையத்தின் தலைவராக இருந்த முனைவர் இராமசாமி இருந்தார்கள். அவர்கள் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். தன்னுடைய துறையில் சிறந்து விளங்கியவர்.ஒரு முறை அந்த மையத்தில் கோடைகால பயிற்சி முகாமில்  கலந்து கொண்டேன். அப்பொழுது பேராசிரியர்  இராமசாமி அவர்கள் எனக்கும் பயிற்சி பெற வந்த  ஆசிரியர்களுக்கும்   நிறைய பாட நூல்களைத் தந்தார்கள், திட்டத் செலவை பயனுறு விதத்தில் செலவைத்தைமைக்காக  அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். நான் பணிபுரியும் அரசுக் கல்லூரியில் படிக வளர்ச்சியை  அறிமுகப் படுத்த வேண்டும் என்ற விருப்பத்தில் இரண்டு சாதனை களை அன்பளிப்பாகப் பெற்றேன். பின்னாளில் அக்கருவிகளைக் கொண்டு இரண்டு எம்.பில் மாணவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழத்தில் பட்டம் வாங்கிக் கொடுத்தேன். பல மூதறிவியல் மாணவர்களின் பிராஜெக்டை முடிக்கப் பயன் பட்டது. முனைவர் இராமசாமி அவர்கள் என்னை அழகப்பா பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற வழிகாட்டியாக அனுமதித்தார்கள் . மேலும் அழகப்பா அரசுக் கலைக்கல்லூரியில் மூதறிவியல் தொடங்கவும் அனுமதி தந்தார்கள் . அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் மீண்டும் மூதறிவியல் என்னால் தொடங்கப்பது   

           நான் அழகப்பா அரசுக் கல்லூரிக்கு மாற்றலாகி வந்த பொழுது அழகப்பா பல் கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவராக முனைவர் சபேசன் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். நானும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரீடர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன் ,ஆனால் வெற்றி பெறவில்லை.. சபேசன் அவர்கள் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் . அழகப்பா பல்கலைக்கழகம் மூதறிவியல் மாணவர்களுக்கான அறிவியல் பாட நூல்களைத் தயாரிக்க முயன்றபோது எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. .நான் இறப்பியலில் புள்ளியியற் கொள்கை  என்ற பாட நூலை எழுதினேன் . இது கொஞ்சம் கஷ்டமானது என்றாலும் நீண்ட காலம் இந்தப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்தியதால் எளிதில் எழுதி முடித்தேன். இந்த நூலை சரிபார்த்து திருத்தம் செய்தது முனைவர் சபேசன் அவர்கள்.  மூதறிவியல் பாட நூல்களை எழுதிய ஆசிரியர்களுக்கு அழகப்பா பல்கலைக் கழகம் பாராட்டு விழா நடத்தியபோது தமிழக அரசின் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் எனக்குப் பொன்னாடை போர்த்திய நிகழ்வு    


துணைவேந்தர் இராமசாமி  அன்பழகன் முனைவர் மெய்யப்பன்

 

   நான் நூல் எழுதி வெளியிடும் போது பொதுவாக பதிப்பகத்தார் 10 நூல்களை ஆசிரியருக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். பொதுவாக அந்தப் பிரதிகளில் 2 மட்டும் எனக்கு வைத்துக்கொண்டு மற்றவற்றை நண்பர்களுக்கும் பள்ளிகளுக்கும் கொடுப்பேன். நான் படித்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளி, கோவிலூர் மடாலய நூலகம் , அழகப்பா அரசு கலைக்கல்லூரி பொது நூலகம்  , உமையாள் ராமநாதன் பெண்கள் கல்லூரி போன்றவற்றிற்கு என்னுடைய நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன் .

நான் அப்பொழுது 20-25 நூல்களை எழுதியிருப்பேன். அதை ஒருமுறை பார்த்த பாலசுப்ரமணியன் என்ற தமிழ் பேராசிரியர் எண்ணை எழுத்தாளர் விக்கிரமன் தலைவராக உள்ள அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராச் சேர்த்து விட்டார்கள் . என்னுடைய எழுத்துப் பனியைப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று எழுத்தாளர் சங்கம் முடிவு செய்தது. அந்தப்பாராட்டு வவிழா  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளியில்  துணைவேந்தர் முனைவர் ராமசாமி தலைமையில் ,குன்றக்குடி பொன்னம்பல்  அடிகளார் முன்னிலையில் நடந்தது. எழுத்தாளர் அய்க்கன் ,குன்றக்குடி அடிகளார் , துணைவேந்தர் இராமசாமி ஆகியோர் பாரட்டிப் பேசினார்கள் 

  




   

   துணைவேந்தர் இராமசாமி                  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

 


                                                                    பாராட்டு விழா மிகழ்வு

 

No comments:

Post a Comment