பறக்கும் விமானத்திலிருந்து கடலைப் பார்த்தால் .....
விமானத்திலிருந்து பூமியின் பரந்த எல்லையை ஓரளவு பார்க்கலாம். தொலைவு கூடக் கூட பூமியின் முழு உருவத்தையும் பார்க்கக் கூடிய வாய்ப்பு அதிகம்மாகும்.
கடல் மீது விமானம் பறக்கும் போது, கடல் கருப்பாகத் தோன்றும். ஆனால் தொடுவானத்திற்கு அருகில் பறக்கும் போது இப்படித் தோன்றுவதில்;லை
ஏன் ?
ஒரு பரப்பிலிருந்து எதிரொளிக்கப் படும் ஒளியின் அளவு, படுகோணம் அதிகரிக்க அதிகரிக்கின்றது . கடலின் மீது விமானம் பறக்கும் போது ,கடலை
நேர்குத்தாகப் பார்க்க வேண்டி இருக்கிறது .குறைந்த படு கோணத்தில் விழுந்து எதிரொளிக்கப் படும் ஒளியே பார்வையாளரை எட்டுகிறது .
இது குறைவாக இருப்பதால் கடல் கருப்பாகத் தோன்றுகிறது .தொடுவானத்திற்கு அருகாமையில் பறக்கும் போது ,படு கோணம் அதிகமாகவும் ,
எதிரொளித்து பார்வையாளரை எட்டும் ஒளி அதிகமாகவும் இருப்பதால் கடல் சற்று பிரகாசமாகத் தோன்றும்
No comments:
Post a Comment