தொலைக் காட்சி தொல்லைக் காட்சி
இன்று தொலைக் காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு தொலைக் காட்சி பெருகி உள்ளது. அதனால் சமுதாயத்திற்கு
நல்லதுமுண்டு ,தீயதுமுண்டு .இது பற்றி ஒரு பெரிய பட்டி மன்றமே நடத்தலாம் .எனினும் இது தவிர்க்க இயலாத அவசியத் தொல்லையாக
வளர்ந்து வருகிறது. இருட்டறையில் இருந்து கொண்டு தொலைக்காட்சியை பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். ஏன்
இருட்டறையில் தொலைக் காட்சித் திரை ஒரு பிரகாசமான ஒளி மூலமாக இருக்கும். கண்ணும் அதற்கு ஏற்ப தன்னை ஒரு நிலைப்
படுத்திக் கொண்டு விடும். பின்னர் திரையை விட்டு விலக்கி பார்வையை வேறு பகுதியில் செலுத்தினால் ,மங்கலான ஒளியால்
கண்மணி விரிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும். இந்த மாற்றம் விரைந்து நடைபெறும் .தொடர்ந்து மாறிமாறி ஏற்படும் இந்த
நிலை மாற்றத்தால் கண்ணில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் தொலைக் காட்சியைப் பார்க்கும் போது
வேறொரு புற ஒளி மூலமும் அறையில்; இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள் .
No comments:
Post a Comment