Wednesday, May 22, 2013

Cartoon


கார்ட்டூன் 
“ஐயா,கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் தாரீங்களா ?”
“கொஞ்சம் இருங்க தம்பி தாரேன்” .
“ஐயா, நேரமாச்சுங்களே,தண்ணீர் தாரீங்களா ?”
“இருப்பா தாரேன்” 

தண்ணீர் கொண்டுவர இவ்வளவு நேரமா? கேணி தோண்டியா  தண்ணீர் எடுக்கப்போறார் .

“ஐயோவ் ,கொஞ்சம் தண்ணீ தரக்கூடாதா ?”
“கொஞ்சம் பொறுமையாக இருக்க மாட்டீங்களா ?”
“அடேய், தொண்டை வறண்டு போச்சுடா ,சீக்கிரம்” .
“சொன்னாப் புரியாதா .இருடா தாரேன்”.
“த் .....த் .... தண்ணீ ,...த்.............த் .............தண்ணீ” .
“ஐயோவ் ,ஏனையா சும்மா கத்திக்கிட்டு இருக்கே
எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்குதே .
உங்களுக்கெல்லாம் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுப்பதே பாவம் .போய் பக்கத்திலே பாருங்க”

மாதம் மும்மாரி பெய்யவும் வருடம் முழுவதும் ஆற்றில் வெள்ளம் ஓடவும் அங்குள்ளது போல தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இல்லை .ஆனால் அங்கில்லாத அளவில்  பொறியியல் கல்லூரிகளும் அவர்களுக்கில்லாத நீண்ட கடற்கரையும் தமிழகத்தில் இருக்கின்றதே மனமிருந்தால் துணிவிருக்கும் ,துணிவிருந்தால் வழி பிறக்கும் .இப்பொழுதே வேலையைத் தொடங்கு .உனக்கு வேண்டிய நீரை மட்டுமல்ல அவர்களுக்கு வேண்டிய கூடுதல் தண்ணீரையும் கூட நீயே கொடுத்துவிட முடியும். இளம் பொறிஞர்களே ,நீங்கள் சரியான திசையில் சிந்தித்து செயல்பட ஆரம்பித்தால் இயலாத காரியம் என்றொன்றிருக்குமா என்ன ?  

No comments:

Post a Comment