Friday, May 3, 2013

Philosophy


மாற்றி யோசி 

சூரிய காந்தி என்றொரு தமிழ்ப் படம் .அதில் கண்ணதாசனே எழுதி கண்ணதாசனே வாயசைத்துப் பாடும் பாட்டொன்று வருகிறது .”பரசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது ,கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது” என்று வரும் பாடலில் ஒரு வரி .”வண்டி ஓட இரண்டு சக்கரம் வேண்டும் அதில் ஒன்று சின்னதென்றால் எந்த வண்டி ஓடும்” என்று.

இந்தப்பாட்டைக் கேட்டவுடன் ஒரு சின்னப் பையன் ஒரு காகிதத்தால் ஒரு பெரிய சக்கரம் ,ஒரு சின்னச் சக்கரத்துடன் கூடிய ஒரு வண்டியின் தோற்ற த்தை வரைந்து வண்டிக்குச் சக்கரம் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றான். மாற்றி யோசிக்கத் தெரிந்த பையன் .அறிவியலில் புதுமை என்பதும் இயற்கையில் பரிணாமம் என்பதும் மாற்றி யோசித்ததின் பின் விளைவே.ஆனால் இந்த மாற்றி யோசித் தத்துவம் வாழ்வியல் ஒழுக்கங்களில் நற்பயன் அளிப்பதில்லை 

ஆம் அறிவியல் வாழ்கையில் எதையும் மாற்றி அமைக்கமுடியும் ஆனால் உலகியல் வாழ்க்கையில் வாழ்க்கை  ஒழுக்கங்களை மாற்றி அமைக்க முயற்சிக்கக் கூடாது.முயற்சியால் எதையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் வாழ்வியல் ஒழுக்கங்களை மாற்றி அமைக்க முயலக்கூடாது .ஏனெனில் ஒழுக்கம் என்பது சமுதாயச்சமநிலை.ஒரு சமநிலையை எட்டிய பின் அதில் ஒரு பெயர்ச்சியை ஏற்படுத்துவது பாதகமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்.  

No comments:

Post a Comment