Monday, May 6, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -சிர்கோனியம்-கண்டுபிடிப்பு

1789 ல் ஜெர்மன் நாட்டின் கலாப் ரோத் ,சிர்கான் எனும் கனிமத்திலிருந்து சிர்கோனியத்தைப் பிரித்தெடுத்தார் .இதன் கனிமம் பொன்னிறம்,ஆரஞ்சு ,கத்திரிப்பூ ஊதா போன்று பல நிறங்களுடன் காணப்பட்டதால் அதை விலை மதிப்புள்ள கற்களாகக் கருதினார் .அரேபிய மொழியில் ஜார்கன் என்றால்பொன் போன்ற” என்று பொருள் .இதிலிருந்தே சிர்கோனியம் வருவிக்கப்பட்டது .இதற்கு இலக்கியங்களில் பல பெயர்கள் காணப்படுகின்றன .ஹயா சிந்த் ,ஜாசிந்த் ,ஜார்கன் போன்ற சொற்கள் சிர்கோனிய க் கனிமத்தைக் குறிப்பிடுவதாகும்.பழங் காலத்தில் இதை நகை செய்யப் பயன்படுத்தினார்கள் .

சிர்கான் என்பது சிர்கோனியம் சிலிகான் ஆக்சைடாகும் .சிகோனியத் தனிமங்கள் உலகில் ஓரளவு மிகுதியாகக் கிடைக்கப்பெறினும் அதிலிருந்து சிர்கோனியத்தைப் பிரித்தெடுப்பது மிகவும் சிக்கலானதாக இருக்கின்றது .இதற்குக் காரணம் உயர் உருகு நிலையும் ,உருகிய நிலையில் வளிமங்களை உட்கிரகித்துக் கொள்ளும் பண்பையும் சிர்கோனியம் பெற்றிருப்பதே ஆகும். 

1824 ல்  ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானியான பெர்சியஸ் இத் தனிமத்தைப் பிரித்தெடுத்தார் ,சிர்கோனியம் ,சிர்கான் மணலாகவும் சிர்கோனியம் ஆர்த்தோ சிலிகேட்டாகவும் இயற்கையில் அதிகம் கிடைக்கின்றது .இதன் செழுமை நிக்கல் ,செம்பு ,ஈயம் ,துத்தநாகம் ,டின் மற்றும் பாதரசத்தின் செளுமையைவிட அதிகமாக இருக்கின்றது .சிர்கானில் சிர்கோனியத்தின் செறிவு 61-67 % ஆகும்.சிர்கோனியம் சூரியன் மற்றும் ஐந்து வகை விண்மீன்களிலும் எரிகற்களிலும் காணப்படுகின்றது .நிலவின் மண்ணில் சிர்கோனிய ஆக்சைடின் செழுமை பூமியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது

பண்புகள் 

வெள்ளியொத்த நிறமுடைய இவ்வுலோகம் எஃகை விட இலேசானது என்றாலும் அதைப் போல் உறுதியானது .கம்பியாக எளிதில் நீட்டிக் கொள்ள முடிகிறது .இது டைட்டானியம் போலத் தீவிரமான ஊடங்கங்களில் அரிப்பைத் தாக்குப்  பிடிக்கின்றது .ஹைட்ரோ புளூரின் அமிலம் மட்டும் இவ்வுலோகத்தை அரிக்கின்றது .டான்டலம் ,டைட்டானியம் ,நையோபியம் போல சிர்கோனியம் அரிப்பெதிர்ப்பைக் கொடுத்தாலும் அவற்றைவிட மேலானது.ஏனெனில் சிர்கோனியம்  கார உலோகங்களினாலும் அரிக்கப் படுவதில்லை .இதனால் சிர்கோனியம் அறுவைச் சிகிச்சைக் கருவிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றது .

Zr  என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய சிர்கோனியத்தின் அணுவெண் 40 ,அணு நிறை 91.22,அடர்த்தி 6490 கிகி /கமீ.இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 1852 oC ,4377 oஆகும்.இதன் இணைதிறன் 4.திண்ம சிர்கோனியம் எளிதில் பற்றி எரிவதில்லை.ஆனால் பொடி  செய்யப்பட்ட சிர்கோனியம் காற்று வெளியில் குறிப்பாக உயர் வெப்ப நிலையில் தானாக எரிகின்றது . 

No comments:

Post a Comment