Monday, May 13, 2013

Philosophy


Philosophy
உலகப் பற்றுடையாருக்கு நல்ல உறக்கம் கிடையாது,.கவலையுடன் இடையிடையே அவர் விளித்தெழுவார் .நினைத்தவுடன் எல்லாவற்றையும்  மறந்து விட்டு உறக்கம் கொள்பவர்கள் பெரும்பாலும் பற்றற்றவர்களாக இருப்பார்கள் .நல்ல உறக்கம் மனிதர்களுக்கு நல்ல மனிதப் பண்புகளையும் வழங்குகின்றது . நல்ல மனமுடையாருக்கு நல்ல உறக்கம் வரலாம் ஆனால் நல்ல உறக்கம் நல்ல மனிதருக்கு அடையாளம் என்று கூறிவிட முடியாது.

உடல் வாழ்வு பொருத்தமற்றது என்பதை ஒவ்வொருநாளும் இரவில் வரும் உறக்கம் சுட்டிக்காட்டுவதாகச் சில ஆன்மிக வாதிகள் மெத்தச் சமத்தர்கள் போல பேசுவார்கள். உண்மையில் வாழ்கையின். நிலையாமையையே இடையிடையே வந்துபோகும் உறக்கம் ஒருவருக்கு உணர்த்திக் காட்டுகின்றது. உடல் வாழ்வு பொருத்தமற்றது என்பதை அல்ல . ஆன்மிக வாதிகளின் உண்மையான பணி இல்லறத்தில் நல்லறம் காணும் வழியை மக்களுக்கு உணர்த்துதலாகும். துறவறத்தைத் துண்டுதலன்று .ஏனெனில் துறவறம் என்பது இயற்கைக்கு விருப்பமில்லாதது.ஒருகாலத்திலும் துறவறம் இல்லறத்தைவிட மேலானதாக இருக்கமுடியாது.துறவறமின்றி இல்லறம் இருக்கமுடியும் ஆனால் இல்லறமின்றி துறவறம் தோன்றியிருக்க முடியாது .

உறக்கத்தில் உடல் உறுப்புகள் ஓய்வில் இருப்பதாலும் ,இறந்து போன செல்கள் நீக்கப்பட்டு புதுப்பிக்கப் படுவதாலும் உடல் புத்துணர்வு பெறுகின்றது.உள்ளம் தெளிவாக இருப்பதால் குழப்பமின்றிச்  சரியாகச் சிந்தித்து செயல்பட முடிகிறது.காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாரதி சொன்னதின் அடிப்படையும் இதுதான் .உலகத்தில் எதுவுமே ஓய்வின்றித் தொடர்ந்து வேலை  செய்யமுடிவதில்லை .வேலையை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் ,தேய்ந்த உறுப்புக்களைப் புத்துப்பித்துக்கொள்வதற்கும் உறக்கம் அவசியமானது..

உயிருள்ளவை மட்டும்தான் உறக்கம் கொள்கின்றன .இயற்கையில் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது பிரபஞ்சத்தில் உயிரற்றவை எதுவும் உறக்கம் கொள்வதில்லை .உலக மக்கள் உறக்கம் கொள்வார்கள் ஆனால் உலகம் ஒரு கணம் கூட உறங்குவதில்லை.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உடல் வாழ்வு வேண்டாம். என்றால் பிரபஞ்சத்தில் உயிரற்றவை மட்டும்தான் இருக்கும். குருடர்களுக்கு ஓவியக் கண்காட்சி வைத்தார்போல ஓர் உலகம்.

கும்பகர்ணன் ஆறு மாதம் தொடர்ந்து உறங்கினான் என்பார்கள் அதனால் அவன் பற்றற்ற பண்பாளன் என்றும் சிறந்த மானுடன் என்றும் கூறிவிட முடியாது. அரசியல் வாதிகள் மக்களவையில் தூங்குவதும் அல்லது வராமல் வீட்டில் ,உல்லாசத் தளங்களில் தூங்குவதும்,மாணவர்கள் வகுப்பறையில் தூங்குவதும் உடலுக்கு நல்லது  என்று எப்படிக் கூறமுடியும்? விழித்திருக்க வேண்டிய நேரத்தில் விழித்திருக்கவேண்டியது அவசியம். உறக்கம் என்பது வாழ்கையின் ஒரு பகுதி வாழ்வைத் தொடர்ந்து கொண்டு செல்ல அது எல்லோருக்கும் தேவையானதாக இருக்கிறது..உறங்கி விழிப்பதும் ,இரவிற்குப் பின் பகல் வருவதும் இறந்து பிறப்பதை இயற்கை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது .இதில் கவனிக்க வேண்டியது இறப்பை மட்டுமல்ல, மீண்டும் பிறப்பதையும் தான்

பற்றற்றிரு என்பதின் உண்மையான பொருள் வாழ்கையில் பற்றுக்கொள். அது இல்லாவிட்டால் வாழ்கையில் தொடர்ச்சியில்லை .ஆனால் வாழ்கையின் நிலையாமையையும் சேர்த்து பற்றுக் கொள்..விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு  எதையும் தனதாக்கிக் கொள்ள முயலாதே என்றுதான் அதன் பொருள்.

 உடலுக்கு உணவு அவசியம். அளவான உணவு வளமான வாழ்வு. உணவின் அளவு கூடுதலாகவும் இருக்கக்கூடாது, குறைவாகவும் இருக்கக்கூடாது.. உடல்நலத்திற்கு உறக்கமும் அதுபோலத்தான் .உறக்கம் என்பது வாழ்கையின் ஒரு பகுதி.அளவான உறக்கம் நல்லது ,உறக்கம் கொள்ளாதிருப்பது கெடுதல். 
பற்றற்றிரு என்றும்  உலக வாழ்க்கை வேண்டாம் என்றும் கூறுவார்கள் ஆன்மிகவாதிகள் .அது உண்மையில் தவறு.என்னெனில் இயற்கைக்கு மீறியாதாக நாம் எதை செய்யமுற்பட்டாலும் அது தவறுதான் .பிறந்து இறப்பதும் இறந்து பிறப்பதும் இயற்கை..இதில் இனி பிறப்பே வேண்டாம் என்றால் அது இயற்க்கைக்கு மீறிய எண்ணமாகும் 

No comments:

Post a Comment