Monday, May 20, 2013

Short story


சிறுகதை
சாதனை
வீரதீரச் செயல் புரிந்தமைக்காக இவ்வாண்டு 21 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு  ஜனாதிபதி அவர்கள் தங்கப்பதக்கமும் லட்ச ரூபாய் பரிசும் கொடுக்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடக்க இருப்பதாக வந்த செய்தியில் பதக்கம் பெறுவோர் பட்டியலில் மரியம் என்ற பெயரைப் பார்த்தவுடன் மதுபாலாவிற்கு நினைவுகள் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றன . அவள் தன்னுடன் கோட்டையூரில் + 2 படித்தவளோ .அவளாக இருந்தால் அவளை நிச்சியம் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள். அலுவலகத்திலிருந்து வந்த கணவனிடம் கெஞ்சி ஒப்புக்கொள்ள வைத்து ருழியாக விழா நடக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

விழா மேடையில் மரியம் வந்து பதக்கத்தையும் பரிசையும் வாங்கிச் சென்றாள்.பல ஊடகங்கள் படமெடுத்தால் மேடை பிரகாசித்தது .ள்,  ள் தோழி மரியம் தான் .

விழா முடிந்தவுடன் அவளைப் பார்க்காமலேயே வீடு திரும்ப கணவனை அவசரப்படுத்தினாள். காரை  மெதுவாக ஓட்டிக் கொண்டே கேட்டான் ,    
 “ உன் தோழி மரியத்தைப் பார்க்கத்தானே என்னையும் கட்டாயப்படுத்தி அழைத்துவந்தாய் .இப்பொழுது பார்காமலேயே வீடு திரும்புவோம் என்கின்றாயே .ஏன் அவள் உன் தோழி இல்லையா?”
.
ஆம் என்று அவள் வாய் முணுமுணுத்தாலும்,அவள் மனதில் கருப்பு வெள்ளையில் ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது .

மரியமும் மதுபாலாவும் சிறுவயதிலிருந்தே பள்ளித் தோழிகள் .ஒவ்வோ ராண்டும் + 2 தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் பாராட்டும் போது அவர்களும் பிற்காலத்தில் அப்படி சாதனை செய்ய வேண்டும் என்று ஒவ்வோராண்டும் பேசிக்கொள்வார்கள் .+2 தேர்வு வந்தது .மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மரியம் பின்தங்கி விட்டாள் .மதுபாலா சாதனை டைக்கவில்லை என்றாலும் தேர்ச்சி பெற்றாள்.அப்போது அவள் தந்தை டெல்லிக்கு மாற்றலாகி விட்டதால் அப்புறம் மரியத்தைப் பார்க்கவேயில்லை .
 மதுபாலா ஒரு டிகிரி முடித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் எஞ்சினியரைக் கைப்பிடித்தாள் .மரியம் + 2 விற்குப் பிறகு ஒரு சிறுவர்  பள்ளிக்கூடத்தில் பெருக்குனராக வேலைக்குச் சேர்ந்தாள் .ஒரு விடுமுறையில் குழந்தைகளுடன் தேக்கடி சுற்றுலா சென்றபோது படகு கவிழ்ந்து 2 குழந்தைகள் இறந்துபோயினர். அப்போது மரியம் 21 குழந்தைகளையும் 3 ஆசிரியர்களையும் காப்பற்றினாள். அதுவே அவளுக்கு பெரும் சாதனையாக அமைந்து விட்டது

எதோ ஒரு தாழ்வு மனப்பான்மை  உள்ளே இருந்துகொண்டு  மரியத்தைச் சந்தித்துப் பாராட்ட அனுமதிக்கவில்லை என்றாலும் 
வீடு வந்து சேரும்போது இயல்பாக உதவி செய்யும் மனப்பான்மை இருந்தால் சாதனை செய்வது எளிது  என்ற உண்மையை மட்டும் புரிந்து கொண்டாள்.

No comments:

Post a Comment