Monday, May 27, 2013

Kavithai


முன்னேற்றத்தின் முடிவில் நீ 


கடந்து கடந்த பாதை 
கடியதோ இல்லை நெடியதோ 
கடந்து முடிந்ததை மீண்டும் 
கடக்க யாரும் நினைப்பதில்லை
கடந்து வந்த பாதையை 
நினைத்து இனி ஆவதொன்றுமில்லை 
கடக்க வேண்டிய பாதையை 
நினைக்காவிட்டால் முன்னேற வழியில்லை 

அரும்பு மலர்ந்து பூவாகும் ஆனால் 
பூத்தபூ மீண்டும் அரும்பாவதில்லை 
காய் கனிந்து பழமாகும் ஆனால் 
பழுத்தபழம் மீண்டும் காயாவதில்லை 
முட்டை பொரிந்து குஞ்சாகும் ஆனால் 
கோழிக்குஞ்சு மீண்டும் முட்டையாவதில்லை 
தீக்குச்சி உரசி எரியும் ஆனால் 
தீய்ந்த குச்சி மீண்டும் எரிவதில்லை 

அரிசி அரைந்து மாவாகும் ஆனால் 
மாவு மீண்டும் அரிசியாவதில்லை 
பரிணாம வளர்ச்சியில் நிலைமாறும் ஆனால் 
பழையதாய் மீண்டும் மாறுவதில்லை
ஒருமுடிவில்லாத பாதைப் பயணம் 
ஊருக்கு அழைத்துச் செல்வதில்லை
முடியும் நம்பிக்கையில் வாழ்ந்தால் 
எதையும் வெல்லாமல் தோற்றதில்லை 

செல்லும் வழியெல்லாம் கல்லும்முள்ளும் 
வேகத்தடை இல்லாத பாதையில்லை 
விவேகம் இருந்தால் போதும் 
விண்ணையும் தாண்டாமல் விடுவதில்லை 
கடந்த பாதை அனுபவம் உனக்கு 
கற்க வேண்டிய பாடம் பிறர்க்கு 
கடக்க வேண்டிய பாதை சாதனை 
கடக்காவிட்டால் எந்நாளும் வேதனை 

முடித்து விட்டு ஒருநாள் திரும்பிப்பார் 
முன்னேற்றத்தின் முடிவில் நீ 

நீதான் நீயேதான் 

No comments:

Post a Comment