Saturday, May 18, 2013

Vinveliyil Ulaa


விண்வெளியில் உலா 
விருச்சிக இராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும் -ஸ்கார்பியோ 
இது லிப்ரா மற்றும் சக்கிடாரியஸ் வட்டாரங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஏறக்குறைய 100 விண்மீன்களை உள்ளடக்கிய ஒரு பெரிய வட்டாரமாகும் .இது தேள் வடிவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது .கிரேக்க புராணத்தில் இது தன் கொடுக்கால் ஓரியன் என்ற வேட்டைக்காரனைத் தீண்டிக் கொன்றுவிடுகின்றது .ஓரியன் மேற்கே மறையும் போது கிழக்கே ஸ்கார்பியோ உதிப்பதால் இப்படிக் கதை புனைந்து சொல்லப்பட்டது .இது பால்வெளி மண்டலத்தில் செழிப்பான பகுதியில் அண்ட மையத்தின் திசையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .விருச்சிக இராசிக்குரிய நட்சத்திர மண்டலமான இவ்வட்டாரத்தில் நமது சூரியன் 23 நவம்பர் முதல் 18 டிசம்பர் வரையிலான காலத்தைக் கழிக்கும் 
இவ்வட்டாரத்தின் முதன்மை விண்மீன் அண்டாரெஸ் எனப்படும் ஆல்பா ஸ்கார்பி ஆகும். இது வானில் மாபெரும் சிவப்பு நிற விண்மீனாக ,மாறொளிரும் பிரகாசத்துடன் 4-5 ஆண்டுகால வட்டச் சுற்றில் தோற்ற ஒளிப் பொலி வெண் 0.9 முதல் 1.2 வரை மாறுமாறு 604 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.விண்ணில் தெரியும் பிரகாசமான விண்மீன்களின் வரிசையில் இது 16 ஆவதாக உள்ளது .இதன் நிறம் நமது சூரியக் குடும்பத்திலுள்ள செவ்வாயைப் போல உள்ளது .அதுவே இதற்குப் பெயர் சூட்டியது எனலாம் .’எரஸ்’  என்பது கிரேக்க மொழியில் செவ்வாய்க்கான பெயர் .அண்டாரெஸ் என்றால்செவ்வாயின் போட்டியாளன்” என்று பொருள் .நிலா உலா வரும் வீதியில் இதற்குக் கேட்டை என்று பெயர் 
அண்டாரெஸ் 3 வினாடிகள் கோண விலக்கத்துடன் நெருக்கமாக அமைத்த ஒரு துணை விண்மீனைக் கொண்டுள்ளது .இது 5 என்ற அளவில் ஒலிப்பொலிவெண்ணுடன் வெண்நீல நிறத்துடன் அண்டாரெஸ்ஸை  900 ஆண்டுகளுக் கொருமுறை சுற்றி வருகின்றது . இத் துணை விண்மீன் சூரியனை விட 17 மடங்கு ஒளி வீசுகின்றது அண்டாரெஸ் ஓரியன் வட்டாரத்திலுள்ள வட்டாரத்திலுள்ள பெடல்ஜியூஸை விடவும் வெப்பமிக்கது .ஏறக்குறைய 700 சூரியன்களின் ஒளியையும் வெப்பத்தையும் கதிர்வீச்சாய் உமிழ்கின்றது .பிரகாசமான அண்டாரசுடன் அண்டாரெஸ்சுடன் அதன் துணை விண்மீனை இனமறிவது மிகவும் கடினம் 

No comments:

Post a Comment