Sunday, May 26, 2013

Short story


வெண்ணிற ஆடை 
போருக்குப்பின் அமைதி.புயலுக்குப் பின் அமைதி போல இந்த ஊரிலும் ஒரு அமைதி வந்தது 

அது செல்வச் செழிப்பான ஊர் .தான் பிறரை விட பணக்காரனாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு சிலரிடம் வந்தபோது ஏமாற்றிப் பொருள் சேர்க்கும் குறுக்கு வழிகள் தோன்றின .ஏமாறுவோர் விழித்துக் கொள்ளக் கொள்ள அணுகுமுறையில் முரட்டுத்தனமும் சேர்ந்துகொண்டது .அபகரித்தலில் தொடக்கியது ,கொள்ளை ,கொலை என குற்றங்களும் பரிணாம வளர்ச்சி பெற்றது ..குறுக்கு வழியில் பொருள்  திரட்டியவர்களிடம் போட்டியும் பொறாமையும் அதிகமானது .எதிர்க்கும் மக்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தனர். ஒரு காலகட்டத்தில் குறுக்கு வழியில் பொருள் சேர்த்த சிலரைத் தவிர ஊரில் மக்களே இல்லை. மக்கள் இல்லை-பொருள் இனி அபகரிக்க பொருள் இல்லைஅவர்களுடைய பார்வை அவர்களுக்குள் மற்றவர் மீது விழுந்தது .தங்கள் வலிமையை காட்டிக் கொள்ளும் உச்சக் கட்டத்தில் அவர்கள் எல்லோருமே இல்லாமற் போனார்கள் 
ஊர் இருந்தது .அவர்கள் திரட்டிய ஊர் மக்களின் பொருள் அப்படியே  இருந்தது ,ஆனால் ஊரில் ஒருவருமே இல்லை.இளம்பெண்ணொருத்தி விதவையாய் வெண்ணிற ஆடை உடுத்தியிருந்தது போல இருந்தது . 

No comments:

Post a Comment