Tuesday, May 7, 2013

Mind without fear


Mind without Fear
பிரச்சனையின் வெம்மையில் வெறுத்துப்போன சிலர் தற்கொலையை ஒரு தீர்வாக நாடுகின்றார்கள். .உண்மையில் தற்கொலையைத் தைரியமாகச் சந்திக்கின்றவர்கள் பிரச்சனையின் முன்னே கோழையாகி விடுகின்றார்கள் .

தற்கொலை செய்துகொள்பவர்கள் கோழைகளா இல்லை தைரியசாலிகளா

தற்கொலை செய்து கொள்ளத் தைரியம் வேண்டும்.யாராவது தைரியமாகத் தன் உடம்பைத் தானே கத்தியால் கீறிக் கொள்வார்களா?. மருத்துவர் ஊசி போட வரும்போது கூட  கொஞ்சம் முகம் சுளிப்பார்களே . தற்கொலைகள் தற்காலிமான தைரியத்தால் தூண்ப்படுகின்றன.

சிலருக்கு ஒரு விதமான பழக்கம் இருக்கும். யார் தன்னைத் திட்டினாலும் ,கேலி செய்தாலும் ,கெடுதல் செய்தாலும் அதைப்போல இரண்டு மடங்கு உடனே திருப்பிக் கொடுத்தால்தான் மனம் அமைதிப்பட்டு ஓய்வார்கள் .அதுபோல தன்னை நெடுங்காலம் அச்சுறுத்திய உருவமில்லாத பிரச்சனை யை வெற்றி கொள்வததாக நினைத்துக் கொண்டு தன்னைத்தானே மாய்த்துக் கொள்கின்றனர்.அவர்களுடைய கற்பனை வெற்றிக்கு அவர்கள் கொடுக்கும் நஷ்டஈடு மீட்டுப் பெறமுடியாத அவர்களுடைய உயிர் என்பதைத் தெரிந்து கொள்ள அவர்கள் உயிருடன் இருப்பதில்லை. தற்கொலை செய்து கொள்பவர்கள் அந்தக் காரியத்தை உடனடியாகச் செய்து முடித்து விடவேண்டும் என்று நினைப்பார்கள்..மாற்றுச் சிந்தனைகளினால் காரியம் சிறிப் போய்விடாமல் அல்லது பிறரால் தடுக்கப்பட்டு தடைப்படாமல்  இருப்பதற்காக விரைவாகச் செய்து முடிக்கின்றார்கள்..தற்கொலைகள் தனியாக இருக்கும்போதும் ,விரைவாக நடக்கும்படியான முறைகளினாலும் ,யாராலும் டையே புகுந்து தடுக்கமுடியாத படியும் நடக்கின்றன. தற்கொலை செய்து கொள்பவர்கள் , பொதுவாக கடல் ,ஆறு ,குளம் ,குட்டை ,கிணறு போன்றவற்றில் விழுந்து மூழ்கி இறக்கின்றார்கள்.நீந்தத் தெரியாதவர்களும் , ஜன சந்தடியின்றி நீர்நிலைகள் அருகில் இருக்கும்போதும் இதைத் தேர்வு செய்கின்றார்கள் .சிலர் குன்றின் உச்சியிலிருந்து விழுந்து உயிர் விடுகின்றார்கள் .சிலர் இரயில் முன் பாய்கின்றார்கள், பூச்சி மருந்து ,தூக்க மாத்திரை ,நச்சு விதைகளைப்ன்படுத்தி  தற்கொலை செய்பவர்களும் இருக்கின்றார்கள் .சிலர் தூக்குப் போட்டுக் கொண்டும் ,சிலர் துப்பாகியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டும் பிரச்சனையிலிருந்து விடுபட்டோம் என்று உயிர் துறப்பர்.

தேர்வில் ஏற்பட்ட தோல்வியை ஒரு மாணவன் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும் .ஆனால் அவன் பிறர் முன்னே அவமானப் பட நேரிடும்போது மனம் வெறுத்து தற்கொலை முடிவைச் சட்டென எடுத்து சட்டென நிறைவேற்றிக் கொள்ள ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். தனிமை  இன்னும் வேகப்படுத்தி விடுகிறது.தனிமையில் இருக்கும்போது நினைத்தை நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்வதற்கு வழி ஏற்படுவதோடு பிறருடன் கலந்தாலோசிக்க வாய்ப்பும் கிடைப்பதில்லை .பிறருடன் மேற்கொள்ளும்   கலந்துரையாடல் மட்டுமே தனிமையிலிருந்து விடுபட்டு மாறுபட்ட சிந்தனைகள் மூலம் தற்கொலை முயற்ச்சியை உடனடியாகத் தள்ளி வைத்து பின் ஒரேடியாக அந்த எண்ணத்தை மனதிலிருந்து அகற்றி விடவும் முடியும்.
வாழ்கையில் எதோ ஒரு கட்டத்தில் எல்லோரும் தோல்வியைச் சந்திக்கின்றார்கள் .தோல்வியைச் சந்திக்காமல் முன்னேறியவர்கள் இந்த உலகில் யாருமில்லை. நேரடியான வெற்றியை விட தோல்வியே அதிலும் மோசமான தோல்வியே சிறந்த வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.வெற்றியால் அறிந்து கொள்ள முடியும் ஆனால் தோல்வியால் புரிந்து கொள்ளவும் முடியும் .
ஒரு வெற்றிக்குப் பின் தோல்விகள் பல வரலாம் ஏனெனில் .எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒருவர் தன் திறனை ஒரேமாதிரியாக் வெளிக்காடமுடிவதில்லை. உலகப் கோப்பையை வென்ற இந்தியக் கிரிக்கெட் அணி பங்களா தேஷ் அணியுடன் மோதி மோசமான தோல்வியைச் சந்தித்தது . ஆனால் ஒரு தோல்விக்குப் பின் வெற்றிகளே அதிகம் வரும்
.மாணவரின் தோல்வியைத் தவிர்க்கவேண்டும் அவமானப் பட்டு தற்கொலை போன்ற விபரீத முடிவெடுப்பதைத் தடுக்க வேண்டும் என்று விரும்பினால் மாணவர்கள் தோல்வியின்றி எந்தச் செயலையும் செய்ய முழுமையாகத் குதிப் படுத்திக் கொள்ள வேண்டும்  என்பதோடு சமுதாயம்மும் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும் .ஒரு மாணவன் படிப்பில் ஆர்வம் கொள்ளாமல் வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றான் என்றால் சமுதாயத்தில் தடுக்கப்படவேண்டிய அந்த வேறு விஷயங்கள் கட்டுப்பாடின்றி பரவியிருப்பதுதான்.இதற்கு பெற்றோர்கள் பிற விஷயங்களால் பிள்ளைகள் தாக்கப்படாதவாறு பதுக்காவலாக இருக்கவேண்டும்.பஞ்சு இருந்தால் பக்கத்தில் நெருப்பு இருக்கக் கூடாது. அப்படி இருக்க அனுமதித்தால் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும் . 

No comments:

Post a Comment