Friday, May 17, 2013

Creative Thoughts


Creative thoughts

வெற்றி என்பது இறுதி முடிவில்லை ,தோல்வி என்பதும்
இறுதியானதில்லை .உனக்கு இன்னும்  வாழ்க்கை இருக்கும் போது தோல்விக்கு முடிவு இருக்கிறது,வெற்றிக்கு வழி இருக்கிறது .நம்முடைய மனதின் உறுதியே இதைத் தீர்மானிப்பதால் வெற்றி பெறும்வரை மனம் தளரக்கூடாது .

ஆர்வம் குறையாமல் இருந்தால் தோல்விகளின் ஊடாக ராஜநடை போட்டு அரியணையில் வெற்றி முடி சூட்டிக்கொள்ளும் .

பறவைகளெல்லாம் கூடு கட்டிவிட்டுத்தான் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன .வாழத் தொடங்கும் போதே பாதுகாப்பையும் தேடிக் கொள்ளவேண்டும் 

 உனக்காக அறிவைத் தேடு ,மற்றவர்களுக்காக பொருளைத் தேடு.இதை திறம்படச் செய்ய ஆற்றலைத் தேடு .

அறிவதெல்லாம் அறிவல்ல .பயன்பாட்டுடைய அறிவே அறிவு.அரியாதனவெல்லாம் அறிவுக்கு அப்பாற்பட்டவைகளும் இல்லை  .கையளவைக் கொண்டு கடலளவை அளக்க யாராலும் முடியாது 

தேவையில்லாதவற்றைத் தேடும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும் அது தேவையான பிறருக்குப் பயன்படும் .என்றாவது ஒருநாள் பயன்படும் என்று வாழ்நாளில் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்தவைதான் ஏராளம் .தேவையில்லை என்று தெரிந்திருந்தும் தேவை என்று ஒன்றைக் கவரும்போது பிறர் தேவையில் தேவையில்லாமல் குறுக்கிடுகின்றோம் .யாரென்றே தெரியாத ஒருவன் பகைவனாவதற்கு இது தான் முழுமுதல் காரணமாகின்றது .

தப்பு செய்து தப்பித்துக் கொண்டவர்கள் அல்லது தப்பித்துக் கொள்ளத் தெரிந்தவர்கள் ,தப்பு செய்து தப்பிக்க முடியாதவர்களைத் தண்டிக்கும் நிலை இருப்பதால் தப்புகள் திருந்தாமல் எப்போதும் தப்பிப் பிழைக்கின்றன

கற்பனை என்பது அறிவைக் காட்டிலும் வலிமையானது ,முக்கியமானதும் கூட.அறிவால் முடியாதது கற்பனையால் முடியும்..அறிவின் திறமையால் உருவான பல அரிய படைப்புக்கள் ,கவிஞர் களின் கற்பனையில் வெகு காலத்திற்கு முன்பே எழுதப்பட்டுவிட்டன .

தவறே செய்யாதவனை விடத் தவறு செய்து திருந்தியவன் மேலானவன்.ஏனெனில் தவறு செய்யாதவன் எதிர்காலத்தில் அந்தத் தவற்றைச் செய்ய வாய்ப்பிருக்கின்றது .ஆனால் தவறு செய்து திருந்தியவர்கள் மீண்டும் அதே தவறு வாழ்கையில் வருமாறு செயல்படுவதில்லை .

தேவையில்லாததை இப்போது வாங்கினால் விரைவில் தேவை யானவற்றையெல்லாம் விற்றுவிட வேண்டிய நிலை ஏற்படும்

எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வாய்ப்புகள் தேடிவரும் 

உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது .எவ்வளவு குறைவாகச் சம்பாதித்தாலும் செலவுக்கு மேல் கூடுதலாக வருவாய் ஈட்டுபவன் செல்வந்தன்.எவ்வளவு அதிகமாகச் சம்பாதித்தாலும் வரவுக்கு மேலே செலவு செய்பவன் எந்நாளும் ஏழை .

இரண்டு மொழிகள் தெரிந்த ஒரு மனிதன் இரண்டு மனிதர்களுக்குச் சமம் .
ஒப்பிட்டால் அவனுக்கு சிந்திக்க  இரண்டு மூளைகள் , உழைக்க நான்கு கைகள்,

வெற்றியைப் பெறவேண்டுமெனில் ,வெற்றியின் மீது கொண்டுள்ள ஈடுபாடு,தோல்வியின் மீதுள்ள பயத்தைவிடக் கூடுதலாக இருக்கவேண்டும். 

No comments:

Post a Comment