Sunday, May 5, 2013

Kavithai


கடமை 

தாய் தந்தையரின் தலைமைக்  கடமை 

தம் மக்கள் தரணியில் புகழொடு வாழ 

தகுதியுள்ளோராய் வளர்ப்பதில் இருக்கிறது 

வழித் தோன்றலின் வாழ்நாள் கடமை 

வயதான பெற்றோர் வருத்தமின்றி வாழ 

வாழும்காலமெல்லாம் காத்தலில் இருக்கிறது 

 

நாட்டுத் தலைவரின் நயத்த கடமை 

நாள்தோறும் மக்கள் நலமாய் வாழ 

நேரிய  நிர்வாகம்புரிவதில் இருக்கிறது 

சமுதாய மக்களின் சமூகக் கடமை 

சாகாத சமுதாயம் சமநிலையில் வாழ

சான்றோனை அரியணையேற்றுவதில் இருக்கிறது 

 

மாண்புடை ஆசிரியரின் மகத்தான கடமை

மாணவர்கள் ஒழுக்கம் வழுவாமல் வாழ

மாற்றுபலன் பாராதுருவாக்குவதில் இருக்கிறது 

படித்துமுடித்த மாணவரின் முக்கியக் கடமை

பார்புகழ நாடும் வீடும் சிறந்தோங்கி வாழ

பண்புடன் உழைக்க முனைவதில் இருக்கிறது

 

உண்மை முதலாளியின்  உயரிய கடமை

ழைப்போரெல்லாம் ரிமையோடு வாழ

எல்லோரும் குடும்பமாயிணைவதில் இருக்கிறது

உண்மைத் தொழிலாளியின் தூ கடமை

ற்பத்தியால்ரும்உவும் வளமொடு வாழ

வாழ்நாள்முழுக்க அர்ப்பணித்துழைப்பதில் இருக்கிறது

No comments:

Post a Comment