Sunday, May 26, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம் 

இந்தியாவில் ஊழலையும் இலஞ்சத்தையும் ஒழித்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை .பல காரணங்களின் அடிப்படையில் இதை எல்லோரும் அறிந்துவைத்திருக்கின்றார்கள் .ஆனால் இந்த ஊழல் ஒழிப்பு மற்றவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் அவர்களுக்குள் இருப்பதை மற்றவர்களும் அறிவார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ளாமல் இருகின்றார்கள் .
ஊழலை ஒழிக்கமுடியும் என்பது உண்மையில் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் இல்லை.அது மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் மேடைகளில் உணர்ச்சி பொங்கப் பேசுவதற்கான ஒரு பொருள் .ஊழலை ஒழிக்க அரசியல் வாதிகளுக்கு ஒருநாளும் விருப்பமில்லை .ஊழலுக்கு அரசியலில் வாய்ப்பில்லாவிட்டால் அவர்கள் இந்தத் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள் .

ஊழலால் சம்பாதிப்பதற்காகவே இலஞ்சம் கொடுத்து பணி நியமன ஆணை வாங்கும் போக்கு எங்கும் இருக்கிறது   
லஞ்சம் கொடுத்து லஞ்சத்திற்கு மேல் சம்பாதிக்க வாய்ப்பிருப்பவர்களுக்கு இது ஒரு வியாபாரம். ஊழலால் சம்பாதிக்கவே லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் அதற்காகவேகாத்திருந்து காத்திருந்து வேலை செய்கின்றார்கள்.லஞ்சம் வாங்க மறுப்பதுமில்லை வெறுப்பதுமில்லை.  
இலஞ்சம் வாங்குபவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம்,மானம்,ரோஷம் எதுவுமே இல்லை.முன்பு தனித்து இதைச் செய்து கொண்டிருந்தார்கள் ,இப்போது கூட்டணி வைத்துக் கொண்டு பெரிய அளவில் செய்கின்றார்கள் .அலுவலகங்களில்,பட்டப்பகலில்,பலர் முன்னிலையில் நடந்தால் கூட கண்காணிக்கவோ,தட்டிக் கேட்கவோ முடியாத நிலையில் இது மேலும் பரிணாம வளர்ச்சி பெரும் நிலையிலேயே உள்ளது
லஞ்சத்தால் சம்பாதிக்க  .வாய்ப்புக் கிடைக்காதவர்கள் ,லஞ்சம் கொடுக்க முடியாதவர்கள் ,லஞ்சம் கொடுக்காமல் வேலையை முடித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே லஞ்சத்தையும் ஊழலையும் எதிர்ப்பது போலப் பேசுகின்றார்கள் .லஞ்சம் பெறும் ஒரு சில அதிகாரிகளைப் பிடிப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது அரசு லஞ்சத்திற்கு எதிரானது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்காக  மட்டுமே. லஞ்சம் கொடுக்காமல் கட்டட அனுமதி ,வரி விதிப்பு ,மின் இணைப்பு ,இறப்பு,வாரிசு,சாதி,மருத்துவச் சான்றிதழ்கள்,பணி நியமன ஆணை,அரசு காண்டிராக்ட்  ஒப்பந்தம்,அரசு நிதி உதவி,கடன்,மனைப் பட்டா ,பத்திரப் பதிவு,கார்  வண்டிகள் பதிவு,ஓட்டுனர் உரிமம் ,.......(கணக்கிலடங்கா ) இதையெல்லாம் இன்றைக்கு ஒருவர் அரசு அலுவலங்களில் பணப் பரிவர்த்தனையின்றி  செய்து முடித்து விட முடியாது.ஒரு சிறிய வேலைக்காக பலநாள்,பலமுறை அலையமுடியாத,விரும்பாத பலர் வேறு வழியின்றி இலஞ்சம் கொடுக்க முன் வருகின்றார்கள்.இலஞ்சம் கொடுக்கும் எண்ணத்தை மக்களிடம் வளர்ப்பதற்காகவே காலதாமதத்தை வேண்டுமென்றே செய்வது அவர்களுடைய அணுகுமுறையாகும் .இலஞ்ச ஒழிப்புத் துறையை ஏற்படுத்தி விட்டால் இலஞ்சம் ஒழிந்து விடும் என்பது உண்மையான கொள்கையாக இருந்தால் மட்டுமே பலனளிக்கும். பள்ளிகளில் இத்தனை மாணவர்களுக்கு இத்தனை ஆசிரியர்கள் என்பது போல இத்தனை அலுவர்கள் ,அதிகாரிகள் ,அரசியல்வாதிகளுக்கு இத்தனை இலஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் என்றிருந்தாலும் கூட பயந்தருவதில்லை.இலஞ்ச ஒழிப்புத் துறை சுதந்திரமாகச் செயல்படும் நிலை,அரசியல்வாதிகளின் கீழ் செயல்படும் போது இருப்பதில்லை.சுதந்திரமாகச் செயல்பட்டாலும்,அல்லது அரசியல்வாதிகளின் கீழ் செயல்பட்டாலும் நேர்மையான உயர் அதிகாரியும்,அலுவலர்களும் இல்லாவிட்டால் அதுவும் பயனளிப்பதில்லை.

No comments:

Post a Comment