Saturday, May 11, 2013

Mind without fear


Mind without fear
தமிழகத்தில்  8 லட்சம் மாணவர்களின் + 2 தேர்வு முடிவுகள் வெளி வந்தன.இந்த முறையும் பொறியியல் கல்லூரிகளை நிரப்புவதற்குத் தோதாக தேர்ச்சி விகிதம் அதிகம் என்றாலும் வழக்கத்தை விட அதிகமான மாணவர்களும் மாணவிகளும் தோல்வி மற்றும் ஏமாற்றம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டனர் என்பது வருந்துதற்குரிய செய்தி .

அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வத்தையும்  தேவையில்லாதனவற்றை ஒதுக்கிவிடும் மனப்பான்மையையும் படிக்கும் போதே பெற்று மாணவர்கள் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வளர்த்துக் கொள்ள வெறும் அறிவுரைகள் மட்டும் பயனளிப்பதில்லை என்பதையே இது காட்டுகின்றது .மாணவர்களோடு தொடர்புடைய இப்பிரச்சனையை அவர்களுடைய கண்ணோட்டத்தில் பார்க்காததின் பின் விளைவுகளே இது..
படிக்கக் கட்டாயப் படுத்துவார்கள் பெற்றோர்கள் .ஆனால் ஏன் ,எதற்காகப் படிக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் படி கூறமாட்டார்கள் .இந்த அறிவுரைகள் எப்போதாவது நடக்கும் பள்ளி விழாக்களில் ஆசிரியர்களால் வாசிக்கப்படுவதுண்டு .சுதந்திரத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மாணவர்கள் அந்த அறிவுரைகளை உள்வாங்கிக் கொள்வதில்லை .ஒரு சில வாரப் பத்திரிக்கைகளிலும் ,செய்தித் தாள்களின் விடுமுறை நாள் ஏடுகளிலும் மாணவர்களுக்கான பல சிறப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றன..ஆனால் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதால் இவை மாணவர்களின் கண்களில் படுவதே இல்லை . படிப்பு,முதல் மதிப்பெண்,உயர்கல்வி தொடர வாய்ப்பு என்பது பெற்றோர்களின் எண்ணம் 100 சதவீத தேர்ச்சி ,மாநிலத்திலேயே முதலிடம்,நல்லாசிரியர் விருது,என்பது பள்ளிகளின் எதிர்பார்ப்பு .மதிப்பெண்களுக்காகவே படிக்கும் பழக்கத்திற்கு நம் மாணவர்கள் மாறிவருகின்றார்கள் .இதனால் படிப்பின் பலன் நாட்டிற்கு கிடைப்பதில்லை . திறமையில்லாவர்களையே பணியில்லர்த்த வேண்டிய கட்டாம் ற்டுகின்றது.
சிங்கப்பூரில் படிப்பு என்பது நம்மை விட மேன்மையானது ,கடுமையானதும் கூட.திறமையான மாணவர்கள் மட்டும் அடுத்தடுத்த உயர் வகுப்புகளுக்குச் செல்லமுடியும் .சல்லடை போட்டு வடி கட்டிவிடுவார்கள் .ஒருவர் எவ்வளவு திறமையை வளர்த்துக் கொண்டாரோ அவ்வளவு மட்டுமே வாழ்கையில் உயரமுடியும் என்பதை மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே உணரும் படி செய்கின்றார்கள் .அங்கே திறமை உள்ளவர்கள் மட்டும் உயருகின்றார்கள் ,உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் திறமையை வளர்த்துக் கொள்கின்றார்கள் .
 தகுதிக் கேற்ற படிப்பு, படிப்புக் கேற்ற திறமை இருப்பதால் வேலைவாய்ப்புக்களில் திறமைக்கேற்ற வேலை கொடுக்க முடிகிறது 
தகுதிகளை வளர்த்துக் கொள்ளாமல் ஒரு மாணவர் உயர் வகுப்பு வரை வரமுடிவதால் ,வெறும் மதிப்பெண்களை மட்டும் எதிர்பார்க்கும் மாணவர்களாகி விடுகின்றார்கள் .வெறும் எதிர்பார்ப்பு மட்டும் எதிர்பார்த்த வெற்றிகளைக் கொண்டுவருவதில்லை .அதனால் ஏமாற்றமடைய நேரிடுகின்றது .இதற்காக தற்கொலை செய்து கொள்வது அவர்களுடைய அறியாமையை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது .

ஒவ்வொரு பள்ளியும் பொதுத் தேர்வுக்கு முன்னர் மாணவர்களோடு ஆசிரியர்கள் எல்லோரும் ஒரு கலந்துரையாடலில் ஈடுபடவேண்டும் .மாணவர்களை உற்சாகப் படுத்தும் போது தோல்வி அடைந்து விட்டால் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டிய மனப்பக்குவத்தையும் பெறவும் ,தவறான முடிவுகளை மேற்கொள்ளமாட்டோம் என்பதற்கான உறுதி மொழியும் வாங்கிக் கொள்ளவேண்டும் 
தேர்வு முடிவுகள் வெளிவரும் முதல் வாரத்திலும் ,இது போன்ற நல்லறிவுரைகளை எடுத்துக் கூறலாம்..ஒவ்வொரு பள்ளியிலும் தோல்வியடைந்த மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தன்னம்பிக்கை ஊட்டும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் ..

No comments:

Post a Comment