Tuesday, May 14, 2013

Micro aspects of developing inherent potentials


Micro aspects of developing inherent potentials

செய்து பாப்போம் வந்தால் லாபம் வராவிட்டால் ஒன்றும் மோசமில்லை என்ற எண்ணத்தோடு செயலில் இறங்குபவர்கள் பலர் இறக்கின்றார்கள் .இவர்கள் இடைநிலை ஒருசில தற்காலிய வெற்றிகளைச் சுவைத்தாலும் திட்ட ரீதியிலான அணுகுமுறை இல்லாததால் இறுதியில் மீள முடியாத  தோல்வியைச் சந்திக்கின்றார்கள்.வெற்றிக்கும் தோல்விக்கும் கதவைக் காவலின்றித்  திறந்தே வைத்திருந்தால் ,உத்தரவின்றி யார்வேண்டுமானாலும் உள்ளே நுழைய நாமே அனுமதி கொடுத்தது போலாகிவிடும் .
உங்களில் பெரும்பாலனோர்க்குத் தெரியாத ஒரு விஷயம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உருவமில்லாத ஒரு மனிதன் இருக்கின்றான்.அவன் அந்த மனிதனோடு மட்டும்  மௌன மொழியில் பேசக்கூடியவன் அவனை யாராலும் பார்க்க முடியாது ,அந்த மனிதனைத் தவிர வேறுயாரும் பேசவும் முடியாது. இதை மனம் என்றும் கூறுவார்கள்  
இந்த மனம் ஓயாமல் எதையாவது ஓதிக் கொண்டேயிருக்கும். அப்படிச் செய்வதற்கு உணர்வறி உறுப்புக்களையெல்லால் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் .இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்ட கதை போல இந்த மனம் மனிதர்களை மடக்கிப் போடத் தயங்குவதில்லை. .. அந்த அக மனிதன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மனித அவதாரத்திலும் ,அவன் கட்டுப்பாட்டில் நீங்கள் வரும்போது மிருக அவதாரத்திலும் இருக்கும். மனம் எண்ணங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை .இரவில் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டாலும் பகல் முழுதும் வேலை செய்துகொண்டேயிருக்கும் .ஒவ்வொருநாளும் தானொரு அதிமேதாவி என்று கணக்கற்ற எண்ணங்களை உற்பத்தி செய்து விளம்பரப்படுத்தி மனிதனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனையும் . வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பது எண்ணங்களை உற்பத்தி செய்யும் மனமே .மனதை ஒருவர் ஆள்பவராக இருப்பரேயானால் அவருடைய செயல்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் ,அப்படியில்லாது மனத்தால் அவர் ஆளப்படுவாரானால் தோல்வி ஏற்படுவதற்கான
வாய்ப்பே மேம்படும் .
மிருக மனம் உள் எதிரியாக வேலை செய்யக் கூடியது.இது கொழுத்து வளர்ந்து விட்டால் அப்புறம் நீ நீயில்லை ,மிருக மனமே உன் முகவரி யாகிவிடும்  

No comments:

Post a Comment