Thursday, May 2, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்  

பள்ளிப் பாடத் திட்டத்தை மாற்றி அமைக்கும் போது தமிழ் பாடத்தில் புதிதாய் என்ன சேர்க்கலாம் என்று தமிழறிஞர்கள்   ஒரு சிலரிடம் யோசனை கேட்டனர்.ஒருவர் கம்பராமாயணம் ,சிலப்பதிகாரம் என்றார் ,ஒருவர்  அகநானூறு ,புறநானூறு என்றார் .ஒருவர் தொல்காப்பியம் என்றார்ஒருவர் எந்த தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றுச் சிறந்து விளங்குகின்றாரோ  அந்த இலக்கியக்கியமே அவசியத் தேவை என்று குறிப்பிடுவார் .இது போல எதற்கு யோசனை கேட்டாலும் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் முன் மொழியப்படுவது நம் வழக்கம் ..யோசனை கூறியவர்களில் யார் வலியவரோ அவருடைய கருத்தே இறுதியில் ஏற்றுக் கொள்ளப்படும் . நமக்கு எல்லா தமிழ் இலக்கியங்களும் தேவையே .ஆனால் எல்லாம் எல்லாருக்கும் தேவையில்லை.மொழியறிவு என்பது அதன் பயன்பாட்டு அறிவோடு பெரிதும் தொடர்புடையது. முதலில் மொழியின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். பிழையின்றிப் பேசுவது ,எழுதுவது புதிய கலைச் சொற்களைப் பற்றிய அறிவு ஒரு பொருள் பற்றிப் பேசவும் பேசினால் புரிந்து கொள்ளவும் தெரிய வேண்டும் .பின்னர் தமிழ் மொழியில் விருப்பமுள்ளவர்களை இனமறிந்து அவர்களுக்கு உயர் தமிழ் கல்வியை வழங்கலாம். இதுபோல  மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்க என்ன விளையாட்டில் பயிற்சி அளிக்கலாம் என்று யோசனை கேட்டாலும் ,எல்லோரும் வெவ்வேறு விளையாட்டையே குறிப்பிடுவார்கள். ஒருவர் ஒன்றின் மீது கொண்டுள்ள ஆர்வம் ,தேர்ச்சி,அதனால் பிற்பாடு அவர் அடையக்கூடிய பயன்கள்  போன்றவற்றால்   அவரை அதையே முன்னிலைப் படுத்தத் தூண்டுகிறது .இது நாம் சரியாகத் தேர்வு செய்யவேண்டியதைத் தவறவிட்டு விடுவதற்கு வழி வகுக்கின்றது .பொதுத் துறைகளில் நம்முடைய செயல்பாடுகள் எப்போதோ ஒரு சமநிலையை எட்டியிருக்கவேண்டும். இன்னும் சமநிலையை எட்டாமல் இருப்பது நம் தூரதிர்ஷ்டமே.

பொருளாதார யோசனைகள் கேட்டாலும் ,நாட்டு நலத் திட்டங்கள் பற்றிக் கேட்டாலும், நிதி ஒதுக்கீடுகளில் முன்னுரிமை பற்றிக் கேட்டாலும் அரசும் சரி ,அதிகாரிகளும் சரி தன் விருப்ப எண்ணங்களையே முன் வைத்து முடிவெடுக்கின்றார்கள் .பொது மக்களுக்கான பொது நலத் திட்டங்களில் சுய நலமில்லாத கருத்துக்களே நாட்டுக்கு இனி நல்லது செய்யும். இரவும் பகலும் மாறிமாறி வருவது மாற்றமில்லை .தனிமனிதனின் பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பதே நாட்டில் ஏற்படுத்த வேண்டிய மாற்றத்திற்காக அரசு மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள்.  

No comments:

Post a Comment