Friday, May 10, 2013

Vinveliyil Ulaa


விண்வெளியில் உலா -செர்பென் (serpen )

இந்த வட்டார விண்மீன்கள் தனித்த இரு சிறு பிரிவுகளைக் கொண்டுள்ளான.மேற்குப்புறமுள்ள விண்மீன்கள் பாம்பின் தலைப் பகுதி போலவும்,கிழக்குப் புறமுள்ள விண்மீன்கள் பாம்பின் வால் பகுதி போலவும் கற்பனை செய்யப்பட்டுள்ளன .இந்தப் பாம்பு ஒப்ஹிசூயஸ் என்ற வீரனின் உடலைச் சுற்றி யுள்ளது .பாம்பின் தலைப் பகுதி அவனது இடது கையிலும் வால் வலது கையிலும் இருப்பதாகக் புனைந்து கூறுவார்கள் .
இவ்வட்டாரத்தின் தோற்றப் பிரகாசமிக்க விண்மீன் பாம்பின் தலைப் பகுதியிலுள்ள ஆல்பா செர்பன்டிஸ் என்றும் அன் அக்கல்ஹை என்றும் அழைக்கப்படும் விண்மீனாகும் 
 அரேபிய மொழியில் இதற்கு பாம்பின் கழுத்து என்று பொருள்.73 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள இதன் ஒளிப் பொலிவெண் 2.63 ஆக உள்ளது .இதற்கு அடுத்து பிரகாசமானது அலாவா (Alava ) என்ற ஈட்டா செர்பன்டிஸ்ஸாகும் .62 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.23 என்ற தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் உள்ளது .
இதிலுள்ள டெல்டா (δ) மற்றும் தீட்டா (θ) செர்பன்டிஸ் விண்மீன்கள் இரட்டை விண்மீன்களாகும்  210 ஒளி ஆண்டுகள் தொலைவில் டிசின் (Tsin) என்ற டெல்டா செர்பன்டிஸ்ஸின் முதன்மை விண்மீன் 4 என்ற ஒளிப் பொலி வெண்ணுடனும் ,துணை விண்மீன் 5 என்ற ஒளிப் பொலி வெண்ணுடனும் ஒன்றையொன்று பல  ஆயிரமாண்டுகள் சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகின்றன .

இவையிரண்டும் மஞ்சள் நிறங் கொண்டு 4 வினாடிகள் கோண விலக்கத்துடன் அமைத்துள்ளன .
பாம்பின் வால் பகுதியிலுள்ள தீட்டா(θ) செர்பன்டிஸ் அகன்ற இடைவெளியுடன் கூடிய இரட்டையாகும் இவை மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்துடன் முறையே 4.5, 5 என்ற ஒளிப் பொலிவெண்ணுட ன் 21 வினாடிகள் கோண விலக்கத்துடன் 132 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன .இவைகளுக்கிடையே நெடுந் தொலைவு இருப்பினும் இவற்றின் தனித்த தன்னியக்கங்கள் ,அவை ஒன்றோடொன்று தொடர்புடையன எனத் தெரிவித்துள்ளன. நு(ν)  செர்பன்டிஸ்சும் 
ஓர் அகன்ற இரட்டையாகும்.இதிலுள்ள விண்மீன்களின் ஒளிப்பொலி வெண் 4 மற்றும் 8 ஆகும் .156 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள  மியூ 
செர்பன்டிஸ்சின் தோற்ற ஒளிப் பொலி வெண் 3.54  ,105 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள சை(ξ)  செர்பன்டிசின் தோற்ற ஒளிப்பொலிவெண் 3.54 ஆகவும் 153 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள சௌ என்ற பீட்டா செர்பன்டிசின் ஒளிப்பொலிவெண் 3.65 ஆகவும் 70 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள எப்சிலான்(ε) செர்பன்டிசின் ஒளிப்பொலிவெண் 3.71 ஆகவும் உள்ளது 


பாம்பின் தலைக்குத் தெற்காக 25000 ஒளி ஆண்டுகள் தொலை வில் அரை நிலவின் உருவத்தில் M 5 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு கோளக் கொத்து விண்மீன் கூட்டம் உள்ளது 
இதில் 60,000 விண்மீன்கள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர் .தொலை நோக்கியால் பார்க்கும் போது இதன் உள்ளகம் அடர்த்தியானதாகவும் ,அதன் புற மண்டலப் பகுதியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போன்று விண்மீன்களையும் கொண்டுள்ளது .

ஏறக்குறைய 7000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் M 16 என்ற தனிக் கொத்து விண்மீன் கூட்டமுள்ளது .இதிலுள்ள விண்மீன்கள் கழுகு வடிவ நெபுலாவில் (IC  4703) புதைந்திருப்பதால் பனி மூட்டம் போல ஒரு சிறிய திட்டாகத் தோன்றுகிறது .ஹபுல் தொலை நோக்கி இதில் விரல் போன்ற கரு வடிவங்களைக் காட்டியுள்ளது .ஒளிரும் வளிமத்தில் உலவும் தூசிகளினால் இது ஏற்படுவதாகக் கூறுகின்றார்கள் ,கழுகு வடிவ நெபுலாவை 1745 -.46 ல் பிலிப்ஸ் லாய்ஸ்  தி சீசாக்ஸ் ((Philippe loys de  Cheseaux ) என்பார் கண்டுபிடித்தார் இது புதிய விண்மீன்களின் உருவாக்கத்திற்கு ஒரு வீரிய மிக்க பகுதியாக விளங்குகிறது .5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இதிலிருந்து M.16 (NGC  611 ) என்ற கொத்து விண்மீன் கூட்டம் உருவாகியுள்ளது .இதிலுள்ள பிரகாசமிக்க விண்மீன்களால் நெபுலா இப்பொழுது ஒளிர்வதாகக் கூறுகின்றார்கள் 

No comments:

Post a Comment