Thursday, May 30, 2013

Micro aspects of developing inherent potentials

Micro aspects of developing inherent potentials

காட்டெருமையோ,மானோ ,வரிக்குதிரையோ  காட்டு விலங்குகள் எதுவானாலும் ஈனும் குட்டிகளில் 50 சதவீதம் பிறந்து ஓராண்டு காலத்திற்குள் இறந்து போய்விடுகின்றன அல்லது கொடிய விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன.முழு வளர்ச்சியடையும்
வரை வாழ்வதில்லை.இது உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவு,உலகின் உயிரியல் சமநிலையின் தீர்ப்பு.உயிரினங்களின் இனப்பெருக்கம் மட்டுமீறி அதிகரிப்பதை இதுவொன்றே சமநிலையில் பாதிப்பின்றி கட்டுப்படுத்துகின்றது.
பறவைகள் இடும் முட்டைகளில் 50 சதவீதத்திற்கு மேல் குஞ்சாகப் பொறிக்கப்படுவதில்லை அல்லது குஞ்சாக இருக்கும் போதே வேட்டையாடப்பட்டு விடுகின்றன.வலிமை மிக்க புலி சிங்கங்களுக்கும் இதே கதைதான்.குட்டிகள் வளர்ந்து முழு வளர்ச்சி அடைவதற்கு முன்னரே 50 சதவீதம் மடிந்து போகின்றன .
ஒரு மரத்தில் பூக்கும் பூக்களெல்லாம் காய்களாவதில்லை,காய்களெல்லாம்  கனிகளாவதில்லை கனிகளெல்லாம் ண்ணப்படுவதில்லை,விதைகளெல்லாம் முளைத்து மரங்களாவதுமில்லை.
 உடலில் உற்பத்தியாகும் எல்லா விந்தணுக்களும் உயிர் பெறுவதில்லை.புணர்ச்சியில் பல கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று மட்டுமே வெற்றி பெற்று கருவாக வளர்கின்றது.50 சதவீதம் பிறந்த சிசுக்களும் முழு வளர்ச்சி அடைவதற்கு முன்னரே இறந்து விடுகின்றன. பிறந்து வளர்ந்தவர்ளில் 50 சதவீதத்திற்கு மேல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை
ஆக்கத்தில் மறைத்துவைத்திருக்கும் அழிவைக் கொண்டே இயற்கை எதிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்தி விரைந்தழியும் ஆபத்திலிருந்து பாதுகாத்து வருகிறது.
இந்த இயற்கை சொல்லும் உண்மையிலிருந்து நாம் வெற்றி பெறுவதற்கான ஒரு இரகசியத்தை தெரிந்து கொள்ள முடியும் .

நம் எண்ணங்கள்யாவும் செயல்களாவதில்லை.இதற்குக் காரணம் நம்மால் இயலக்கூடிய செயல்களுக்கான சிந்தனைகளை விட செய்யாத செயல்களுக்கான எண்ணங்களே அதிகம் எண்ணப்படுகின்றன.மூளையை எல்லோரும் எண்ணங்களின்  குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.தங்கத்தில் பதிக்கப்பெற்ற வைரமே ஜொலிக்கிறது, குப்பையில் கிடக்கும் வைரம் யாருக்கும் தெரியாததால் மதிக்கப்படுவதில்லை.
நம் செயல்கள்யாவும் வெற்றி பெறுவதில்லை. இதற்குக் காரணம்  சரியாகத் திட்டமிட்டு எண்ணங்களைப் பராமரிப்பதில்லை.முடியும் என்று முனைந்தால் எல்லோருக்கும் எதுவும்  முடியும்.ஆனால் முயற்சிப்பதற்கு உன்னால் முடிந்தால்தான் உன்னாலும் முடியும்.

தேவையில்லாத எண்ணங்களை அசைபோடுவதை விட்டுவிட்டாலே பாதி வெற்றி பெற்றமாதிரிதான்.கொள்ளளவுக்கு ஏற்ப பொருள் இடம்பெறுவது போல,நாடாவில் செய்திகளைப் பதிவு செய்வதைப் போல மூளையிலும் நினைவாற்றலோடு எல்லா எண்ணங்களையும் பதிவு செய்ய முடியாது உண்மையில்,தோன்றும் எல்லா எண்ணங்களும் மூளையில் அழுத்தமாகப் பதிவுசெய்யப்படுவதில்லை.எண்ணங்களை  எண்ணங்களே குறுக்கிடுவதால் ஏற்படும் ஒரு பாதிப்பு. முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் ஒருவர் நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ளமுடியும் .சைகளே தேவையில்லாத எண்ணங்களை மூளையில் நிரப்பிவிடுகின்றன.அஸ்திவாரத்திற்கு ஏற்ப கட்டுமானம் இருப்பதைப் போல,அடி மரத்தின் உறுதிக்கு ஏற்ப கிளைகளும் காய்களின் விளைச்சலும் இருப்பதைப்போல செயல்களுக்கு ஆதாரமான உறுதியான எண்ணங்களுக்கு ஏற்ப மூளையின் நினைவாற்றலை வலுவூட்டிக்கொள்ளமுடியும்

No comments:

Post a Comment