அறிகஅறிவியல்
இரவில் கொசு எப்படி நம்மை க் கண்டு பிடித்து இரத்தத்தை உறிஞ்ச சரியான இடத்தைத் தேர்ந் தெடுக்கிறது ?
பூச்சிகள் நல்ல கண் பார்வை பெற்றிருந்தாலும் ,கொசு தன்னுடைய இரை தேடலுக்கு கண் பார்வையை நம்பி இருக்கவில்லை.
தலையில் அதற்கு இரண்டு உணர் கொம்புகள் (antennae) இருக்கின்றன. உணர் கொம்புகள் சமிக்கை அலைகளை உணர வல்லவை .
நம்முடைய வானொலி ,தொலைகாட்சி போன்றவைகள் இது போன்ற உணர்கொம்புகளைக் கொண்டு ஒலி ,ஒளி அலைகளை
உணர்ந்து பேச்சு மற்றும் காட்சிகளை த் தெரிவிக்கின்றன .கொசுக்கள் உணர்கொம்புகளைப் பயன் படுத்தி உணவு கிடைக்கும் தன் இரையை
இடமறிந்து கொள்கின்றன உயிரினங்களின் உடலிலிருந்து வெளிவரும் வியர்வை, மற்றும் பிற கழிவுகளினால் உண்டாகும் வேதிச் சமிக்கைகள்
காற்றினால் பரவ அதை இனமறிந்து உடலின் சரியான இருப்பிடத்தைத் தெரிந்து கொள்கின்றன பெண்களின் மாதவிடாய் ,இரத்தத்தின் செறிவு போன்றவற்றைக் கூட கொசுக்கள் அறிந்து கொள்கின்றன. .பொதுவாக கொசுக்கள் ஈரம் ,வெது வெதுப்பு ,கார்பன் டை ஆக்சைடு இருள் மற்றும் அழுத்தமான நிறங்கள் போன்றவற்றை அதிகம் விரும்புகின்றன.
கொசுக்களிலிருந்து இயற்கையாகத் தப்பிக்க விரும்பினால்கொசுக்கள் விரும்பாத வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்ளலாம் .காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் இருந்து கொண்டால் சமிக்கை அலைகள் கொசுவை எட்டுவதில்லை. அதனால் கொசுக்கள் நம்மை இடமறிந்து கொள்ளத் தவறுகின்றன.
No comments:
Post a Comment