Wednesday, May 2, 2012

பெடல்ஜியூஸ்
பெடல்ஜியூஸ் ஒரு நீண்ட கால மாறொளிர் விண்மீனாக,அதன் பிரகாசம் 6 ஆண்டுகளில் ஒளிப்பொலிவெண் சுழியிலிருந்து 1.3 வரை இருக்குமாறு மாறுகிறது.இதன் ஒளிர் திறன் 100000 முதல் 40000,௦௦௦ மடங்கு சூரிய ஒளிர் திறனாக வேறுபடுகிறது .பெடல்ஜியூஸ் மாறொளிரும் போது பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுக்கு ஏற்ப அதன் விட்டம் சுருங்கி விரிகிறது .பெருமப் பிரகாசத்தின் போது அதன் விட்டம் சிறுமமாகவும் ,அதனால் அதன் வெப்பநிலை அதிகமாகவும் ,சிறுமப் பிரகாசத்தின் போது இதற்கு எதிராகவும் இருக்கிறது.
ஹபுல் டெலஸ்கோப் பெடல்ஜியூசைஆராயவும் தவறவில்லை. அது பெடல்ஜியூசுக்கு மிகப் பெரிய அளவிலான வளி மண்டலம் இருப்பதையும் அதன் புறப்பரப்பில் ஏதோ இனமறியப்படாத வெப்ப மிக்க பிரகாசமான புள்ளிகள் காணப்படுவதையும் புலப்படுத்திக் காட்டியுள்ளது. இப் பகுதிகள் பிற பகுதிகளை விடவும் 2000 o K வெப்ப நிலை கூடுதலாக உள்ளது. சூரியனில் இதற்கு மாறாக வெப்ப நிலை தாழ்ந்த மங்கலான கரும் புள்ளிகள் இருக்கின்றன. என்பதையும் இங்கு ஒப்பிட்டு நோக்கலாம் .மிகப் பெரிய பிரகாசமான் புள்ளியில் குறைந்தது 10 பூமிகளை உள்ளடக்கலாம். பெடல்ஜியூஸ் ஒரு மாறொளிர் விண்மீனாக இருப்பதால் இதன் பிரகாசம் ஓர் அரை குறையான ஒழுங்கு முறையுடன் மாறுகிறது. வேறு ஒரு சுற்றுக் காலத்துடன் அதன் பிரகாசம் ,அதாவது 420 நாட்கள் அலைவு காலத்துடன் மாறுவதை நுணுகி ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர் .இந்த அலைவு காலம் ஏறக்குறைய நமது சூரியனில் காணப்படும் 11 ஆண்டுகள் கரும்புள்ளி சுழற்சியை ப் போல இருக்கிறது. பெடல்சியூசின் புறப் பரப்பிற்கு க் கீழே ஏற்படும் வளிமக் கிளர்ச்சியாலான இயக்கம் ,அதிலுள்ள பிரகாசமான புள்ளிகளை காலத்திற்கு ஏற்ப இடம் மாற்றுவதால் இந்த மாறொளிர்தல் ஏற்படுகின்றது. . பெடல்ஜியூஸ் விண்மீனைச் சுற்றி 1000 மில்லியன் கிலோ மீட்டர் வரை தூசியாலான புற மண்டலம் விரிந்துள்ளது. இது பெடல்ஜியூசால் உமிழப்பட்டு வெளியேறிய அதன் மூலப் பொருட்களாகும் . தூசி தவிர பெடல்ஜியூஸ் இரண்டு துணை விண்மீன்களையும் பெற்றிருப்பதாக 1985 ல் கண்டுபிடித்தார்கள் .பிரகாசமிக்க பெடல்ஜியூசின் பின்னணியில் இந்த விண்மீன்களை இனமறிவது எளிதில்லை. பெடல்சியூசுக்கு அருகிலுள்ள விண்மீன் 5 வானியல் அலகுத் தொலைவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சுற்றிவருவதாகவும் ,விலகியுள்ள விண்மீன் 40 -50 வானியல் அலகுத் தொலைவில் சுற்றி வருவதாகவும் கண்டறிந்துள்ளனர், Mass ~18–19 M☉ Radius ~1180 R☉ Luminosity ~140,000 L☉ Surface gravity (log g) -0.5 Temperature 3,500K Metallicity 0.05 Fe/H Rotation 5 km/s Age ~1.0×107 years பெடல்ஜியூஸ்சின் நிறை சூரிய அலகில் 12 - 17 க்கு உட்பட்டதாக இருக்கலாம் என்றும் ,இந் நிலையில் அதன் உள்ளகத்தில் ஹைட்ரஜன் தீர்ந்து போய் ஹீலியம் எரிபொருளாகவும் புறக் கூடுகளில் ஹைட்ரஜன் எரிபொருளாகவும் இருக்கிறது என்றும் கருதுகிறார்கள் பெடல்ஜியூஸ் அழிந்து கொண்டிருக்கும் ஒரு விண்மீன் என்று இப்பொழுது கண்டு பிடித்துள்ளனர். இது இன்னும் ஒரு சில பத்தாண்டுகளில் நோவா ,சூப்பர் நோவா போன்ற நிலைகளை அடையலாம் என்று கூறுகின்றார்கள்

No comments:

Post a Comment