மக்கள் : டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறதே?
மந்திரி : கவலைப்படாதீர்கள்.அதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம்.சரியான நேரத்தில்
சரியான முடிவெடுப்போம் .
மக்கள் : முன்னாலேயே உன்னிப்பாகக் கவனித்திருந்திருக்கலாமே.
அனுபவமின்மை அனுபவமாக வெளிக்காட்டிக் கொள்ளும் நிலைகளைத்தான் இந்திய மக்கள் ஒவ்வொரு
நாளும் சந்திக்கின்றார்கள்.மாணவன் ஆசிரியனைப் போல நடிப்பதைத்தான் வாழ்க்கை எனும் மேடையில்
பார்கின்றார்கள்
ஒவ்வொரு நிமிடமும் உழைப்பைக் காட்ட வேண்டிய கடமை மக்களுக்கு உண்டு.நாட்டு மக்களுக்காக நாட்டின்
வளத்தையும்,நலத்தையும் மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு உண்டு.
நாடு நம் மக்களாலேயே சுரண்டப்படுவதை உன்னிப்பாக கவனிக்கின்றீர்களா?
ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்தியனால் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவதொரு வழியில் ஏமாறுகின்றான் அல்லது ஏமாற்றப்படுகின்றான்.இது எப்படி தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்கின்றீகளா?
பெட்ரோல் விலை ஏறுமுகமாக இருப்பதற்கு கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பதும்,எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்வதும் காரணமாக இருக்கட்டும். ஆனால் இதற்காக நீங்கள் உங்களுடைய உபரிச் செலவினகளைக் குறைத்துக் கொண்ட்டீர்களா? அதை இப்பொழுது முதற்கொண்டே உன்னிப்பாகக் கவனிக்கலாமே .
.
No comments:
Post a Comment