Friday, May 18, 2012

Vinveliyil Ulaa-Space Science

விண்வெளியில் உலா கொலும்பா வட்டார விண்மீன் கூட்டம்
16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு நாட்டு வான வியலாரான பெட்ரஸ் பிலான்சியஸ் (Petrus plancius) என்பார் கானிஸ் மேஜர் என்ற வட்டாரத்திற்கு தோற்றத் தொலைவில் அருகாமையிலுள்ள சில விண்மீன்களை ஒன்று சேர்த்து கொலும்பா என்ற புதிய வட்டார விண்மீன் கூட்டத்தைத் தோற்றுவித்தார்.இது பறக்கும் புறா போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது விவிலிய கதை மரபுப்படி வெள்ள ஊழி கடந்து வாழ்ந்த மனிதவின முன்னோனான நோவாவின் புறா(Noah 's dove ) என்பதைக் குறிப்பிட இதற்கு இப் பெயர் இடப்பட்டுள்ளது உணவின் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை புறா நோவாவிற்கு உணர்த்துவதை இது குறிப்பிடுவதாகக் கூறுவர். இதிலுள்ள பிரகாசமிக்க விண்மீனான ஆல்பா கொழும்பே 240 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப் பொலி வெண் 2.6 உடைய இளம் நீல நிற விண்மீனாகும் புறா என்ற பொருள் தரும் அல் பாகிட்டா என்ற அரேபிய மொழிச் சொல்லே இதற்கு மூலமானது மீயூ கொழும்பே தப்பி யோடும் ஒரு விண்மீனாகும் .இது நம் பால் வெளி மண்டலத்தில் அபரிதமான வேகத்துடன் சுமார் 100 கி மீ /வி என்ற வேகத்தில் இயங்கி வருகிறது .53 எரிடிஸ்(Arietis) மற்றும் AE ஔரிகே போன்ற இரு மங்கலான விண்மீன்களுடன் இது ஒரே புள்ளியிலிருந்து விலகி விரிந்து செல்வது போலத் தோன்றுகிறது. இவை மூன்றும் ஒரு காலத்தில் பல விண்மீன்களின் தொகுப்பாக இருந்திருக்கலாம் என்றும்,அது ஒரு நிலையாமையால் பாதிக்கப்பட்டு 2-3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூப்பர் நோவாவாக வெடித்திருக்கலாம் என்றும் அனுமானித்திருக்கின்றார்கள்

No comments:

Post a Comment