காமா ஓரியானிஸ் என்ற பெல்லாட்ரிக்ஸ்
பெல்லாட்ரிக்ஸ் என்றழைக்கப்படும் காமா ஓரியானிஸ் பிரகாசமான ஆனால்
ரீகலையும் பெடல்சியூசையும் விடக் குறைவான வெப்ப மிக்க ஒரு பெரு
விண்மீனாகும்.உண்மையில் இது ரீகலை விடவும் வெப்ப மிக்கதாக உள்ளது.
இதன் புறப்பரப்பு வெப்ப நிலையை 2௦ ௦௦௦௦ டிகிரி கெல்வின் நெடுக்கையில் இருப்பதாக
மதிப்பிட்டுள்ளனர்.பெல்லாட்ரிக்ஸ் என்றால் அரேபிய மொழியில் பெண் வீராங்கனை
என்று பொருள்.வான சாஸ்திரத்தால் எதிர் காலத்தை முன்னுரைப்பவர்கள் ,இந்த விண்மீன்
விண்ணில் தோன்றி இருக்க பூமியில் பிறந்த பெண்கள் மகிழ்ச்சியாகவும் பேச்சுத்
திறமை உள்ளவர்களாகவும் இருப்பார் என்று கூறுவார்கள்.இந்த விண்மீன் 243
ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 1.64 உடன் காணப்படுகிறது .
வேட்டைக்காரன் பெல்ட்டில் உள்ள மூன்று விண்மீன்களை சீட்டா(ζ),எப்சிலான் (ε), டெல்ட்டா (δ)
ஓரியானிஸ் என்றும் இவற்றை முறையே அல்நிடாக்,அல்நிலம் மற்றும் மிண்டகா என்றும்
குறிப்பிட்டுள்ளனர்.இவை மூன்றும் சற்றேறக் குறைய சமமான உருவ அளவுடனும் ,
பிரகாசத்துடனும் இருப்பினும் ,அல்நிலம் சற்று கூடுதல் பிரகாசத்துடனும், மிண்டகா சற்று குறைவான பிரகாசத்துடனும் இருக்கின்றன.
இவை முறையே 817,1340,916 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. சீட்டா மற்றும்
டெல்ட்டா ஓரியானிஸ் இரண்டும் 'O' வகை விண்மீனாகும். இவற்றின் புற வெப்ப நிலை 25000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது.
அரேபிய மொழியில் அல்நிடாக் என்றால் "அல்ஜாயுஷாவின் பெல்ட்" என்று பொருள். இது
ஓர் இரட்டை விண்மீனாகும் .இதன் துணை விண்மீன் 3 வினாடி கோண விலக்கத்தில்
உள்ளது. இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. அல்நிடாக்
எக்ஸ் கதிர் மூலமாக விளங்குகிறது. 6 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது தற்பொழுது மாபெரும் சிவப்பு விண்மீனாக உருமாறிக் கொண்டிருக்கிறது. விரைவில்
இது ஒரு சூப்பர் நோவாவாக வெடித்துச் சிதறலாம்.
பெடல்சியூசுக்கும்,பெல்லாட்ரிக்ஸ்சுக்கும் ஓரளவு இடையில் மங்கலான மூன்று
விண்மீன்களடங்கிய ஒரு துணை வட்டாரக் கூட்டம் உள்ளது. இதை வட மொழியில்
மிருகசீர்ஷம் என்றும் தமிழில் மும்மீன் என்றும் பெயர்கள் .சந்திரன் விண்மீன்களிடையே
உலா வருவது போலத் தோற்றம் தரும்
சந்திரன் விண்மீன்களிடையே உலா வருவது போலத் தோற்றம் தரும் நிலவின் வீதியில் இருக்கும் 27 விண்மீன்களுள் திருவாதிரையும் மிருகசீர்ஷமும் அடுத்தடுத்துள்ள விண்மீன்களாகும் மும்மீன்களுள் ஒன்று லாம்டா ஓரியானிஸ் என்ற மெய்சா(Meissa ) .இது 1660 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .39 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் காணப்படுகின்றது இதுவும் 'O ' வகை விண்மீனாகும்,இதிலுள்ள பிரகாசமான விண்மீன்களைக் காட்டிலும் இது தன் புறப் பரப்பு வெப்ப நிலையை அதிகமாக 30 ,௦௦௦ டிகிரி கெல்வின் நெடுக்கையில் கொண்டுள்ளது.
ரீகலுக்கு வலப்புறம் கெப்பா ஓரியானிஸ் என்ற ஸைய்ப் (saiph ) என்ற வெப்ப மிக்க பெரு விண்மீன் உள்ளது .இதன் புற வெப்ப நிலை ரீகல்,பெல்லாட்ரிக்ஸ்ஸை விடவும் அதிகமாக 25000 டிகிரி நெடுக்கையில் உள்ளது .இது ஏறக்குறைய எப்சிலான் ஓரியானிஸ்ஸை ஒத்திருக்கிறது
No comments:
Post a Comment