எழுதாத கடிதம்
வளரும் நாடுகளுக்கும் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் மின்சாரம் மிகவும் தேவையானது வீட்டுப் பயன்பாட்டிற்கும் தொழில் துறைகளில் உற்பத்திக்கும் இரவு நேரங்களில் சாலை மற்றும் பொதுவிடங்களில் ஒளி தருவதற்கும்.மின்சாரம் தேவையாக இருக்கிறது. மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் ,பொருள் உற்பத்திக்காக பெருகி வரும் தொழில் சாலைகள்,பெருகி வரும் புதிய புதிய விஞ்ஞான வசதிகள் இதற்குக் காரணமாக இருக்கின்றது .2025 ல் நமது மின்சாரத் தேவை இப்போது தேவைப்படுவதைப் போல இரு மடங்காக இருக்கும். இப் பிரச்னையை இப்போது முதற்கொண்டே உன்னிப்பாகக் கவனித்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுத்தால்,கடுமையான எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியும். நமெக்கென விடியும் போது விடியட்டும் என்று சும்மா விட்டுவிட்டால் எப்போதும் போல நாட்டையும் நாட்டு மக்களையும் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.பல வளரும் நாடுகள் இப்போது சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழிமுறைகளில் புதுமையைப் புகுத்திப் பயன்படுத்தத் தொடங்கியிருகின்றன.ஸ்பெயின் நாட்டில் சூரிய சக்தி கோபுரங்களை நிர்மாணித்திருகின்றார்கள்.42 கால் பந்து மைதானப் பரப்பளவு கொண்ட அதாவது 120 சதுர மீட்டர் பரப்பில் 1250 பிரதிபலிக்கும் கண்ணாடிகளை வைத்து விழும் சூரிய ஒளியை திசை திருப்பி சூரிய சக்தி கோபுரத்தில் விழுமாறு செய்து நீரின் வெப்ப நிலையை 2000 டிகிரி சென்டிகிரேடு வரை உயர்த்தி நீராவியின் மூலம் மின்சாரம் தயாரிக்கின்றார்கள்.இது இரு சிறிய கிராமத்திருக்குப் போதுமானதாக இருக்கின்றது.இஸ்ரேல்,பிரான்சு போன்ற நாட்டினர் சூரிய மின்கலம் மூலம் நேரடியாக மின்சாரம் தயாரிக்கும் முறையைப் பின்பற்றுகிறார்கள் இவ் வழிமுறைகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதால் எதிர்காலத்தில் விரிவுபடுத்தி மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
ஆண்டுமுழுதும் சூரிய ஒளி செறிவாகக் கிடைக்கும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்துகொண்டு,முறையான,விரிவான, முயற்சிகளை மேற்கொள்ளாமல்,மின்சாரத் தட்டுப்பாடு வரும்போதெல்லாம் தயாரான பதிலைச் சொல்வதால் எந்தப் பயனும் விளைவதில்லை. ஆட்சியாளர்களே, பிரச்சனைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள் ஆனால் காலவரம்பிற்குள் ஏதாவது பயனுள்ள முயற்சி எடுங்கள் .
.
No comments:
Post a Comment