ஆதின கர்த்தர்கள் வெறும் துறவிகள் மட்டுமில்லை. அவர்கள் மதம்,இனம்,மொழி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அறவழியில் நின்று மக்களுக்கு நல்வழி காட்டுபவர்கள்.மண்,பொன்,பெண் மீது சிறுதும் விருப்பமில்லாதவர்கள்.இல்லறத்தில் இருப்பவர்கள் தவறான வழியில் சென்று சமுதாயத்தை சீரழித்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் பின்பற்றி ஒழுக வேண்டிய அறநெறிகளையே துறவறத்தில் இருப்பவர்கள் பரப்பிவருகின்றார்கள்.அறவுரைகளை எடுத்துக் கூறுவதற்கு ஒருவர்க்கு தொண்டர்கள் கூட்டமும், தலைமைப் பதவியும் அவசியத் தேவையில்லை.
ஒரு மனிதன் சேவை செய்வதற்கு பதவி தேவையில்லை .பதவி இன்றி சேவை செய்தால் அதுவே உண்மையான,மனப் பூர்வமான சேவையாக இருக்க முடியும்.பதவி இருந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் இல்லாவிட்டால் சும்மா இருப்பேன் என்றால் அது தன்னலம் பூசப்பட்ட சேவையாகத் தான் இருக்கமுடியும்.அப்படிப்பட்ட சேவைகளை பூதக் கண்ணாடி மூலம் நுணுகி ஆராய்ந்தால் அதில் புரையோடிப் போயிருக்கும் குறைபாடுகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாம். அன்பு,இன்சொல்,சேவை பற்றற்ற தன்மை போன்ற குணங்களே துறவிகளின் அடிப்படை இலக்கணங்களாகும்.இந்த அடிப்படி இலக்கணங்களைப்
பின்பற்றாத எவரும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் துறவிகளாக இருக்கவே முடியாது.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு "
என்பான் வள்ளுவன். இல்லறத்தில் இருந்துகொண்டு துறவிகளுக்கு இலக்கணம் வகுத்தவன்.
வரும் தலைமைப் பதவியை விடாப் பிடியாக பற்றிக்கொள்கிறார்.தொண்டர்கள் குண்டர்கள் போலச் செயல்படுகின்றனர்.பணிப் பெண்ணிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்கின்றனர். நியமனத்திற்கு எதிராகச் செயல்படுவார்கள் அச்சப் படுமாறு அறைகூவல்.எதிர்த்து போராடுபவர்கள் மீது செருப்பு வீச்சு.துறவிகளின் இலக்கணத்தை மாற்றிவிட்டார்களே.
No comments:
Post a Comment