Sunday, May 20, 2012

Vinveliyil ulaa

விண்வெளியில் உலா மிதுன ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும் ஜெமினி
டாரெஸ் மற்றும் கான்செர் வட்டார விண்மீன் கூட்டங்களுக்கு இடையிலுள்ள ஒரு வட்டாரம் .இரட்டையர் எனப்படும். இவ் வட்டாரத்தை சூரியன் நகர் வலம் வருவது போலத் தோற்றம் தரும் கதிர் வீதியில் ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை சூரியன் கடக்கிறது. இது 12 ராசிகளில் மிதுன ராசிக்குரிய நட்சத்திர மண்டலமாகும் .இவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் காஸ்டர் (Castor) என்ற ஆல்பா ஜெமினோரம் மற்றும் போலக்ஸ் (Pollux) என்ற பீட்டா ஜெமினோரம் என இரு முக்கிய பிரகாசமிக்க விண்மீன்கள் தோற்றத் தொலைவில் அருகருகே உள்ளன.ivai சற்றேறக் குறைய ஒத்த விண்மீன்கள் போன்று தோற்றம் தருகின்றன இதன் பொருட்டே இந்த வட்டார விண்மீன் கூட்டத்தை இரட்டையர் (twins) என அழைக்கின்றார்கள் கிரேக்க புராணத்தில் காஸ்டர்,போலக்ஸ் என்ற இரட்டையர்கள் கூறப்பட்டிருக்கின்றார்கள்.இவர்கள் நினைவாகவே ஜெமினியிலுள்ள இரு பிரகாசமிக்க விண்மீன்களும் பெயரிடப் பட்டுள்ளன .இவர்கள் இருவரும் பொன் கம்பிளி தேடி ஆர்கோ என்ற தோணியில் பயணம் செய்ததாகக் கூறுவார்கள்.இவர்கள் அந்தக் காலத்தில் ,கடல் பயணம் மேற்கொண்ட பழங்காலத்திய கிரேக்கர்களாக பெருமைப்படுத்தப் பட்டுள்ளனர் .இவ்விரு விண்மீன்களும் இரட்டையர் என அழைக்கப்பட்டாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் இருப்பதுடன் முற்றிலும் வேறுபட்ட இயற்பியல் பண்புகளைப் பெற்றுள்ளன. . . . ஆல்பா ஜெனோரம் என்ற காஸ்டர் ,உண்மையில் பீட்டா ஜெனோரம் என்ற போலக்சை விடச் சற்று குறைந்தது .வெறும் கண்களுக்கு ஒரு விண்மீன் போலத் தோன்றும் காஸ்டர் தொலை நோக்கியில் தோற்றப் பொலி வெண் 2 .௦ மற்றும் 2 .8 கொண்ட ஒரு வினாடி கோண விலக்கத்துடன் இருக்கும் ஒரு இரட்டை விண்மீனாகத் தென் படுகிறது. இதன் சுற்றுக் காலம் 380 ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர். இவற்றை காஸ்டர் A , காஸ்டர் B என்று குறிப்பிட்டுள்ளனர். இவைகளுக்கு இடைப்பட்ட தொலைவு
10 ,௦௦௦,௦௦௦ கிமீ அதாவது சூரியனுக்கும் புதனுக்கும் இடைப்பட்ட தொலைவில் 6 ல் ஒரு பங்காகும் .இவை இரண்டுமே இரட்டை விண்மீன்கள் என நிறமாலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. காஸ்டர் A ல் மொத்த நிறை 3 .2 சூரிய நிறை கொண்ட ஏறக்குறைய ஒத்த இரு விண்மீன்கள் ஒன்றை ஒன்று 9 .22 நாட்களில் சுற்றி வருகின்றன. காஸ்டர் B ல் உள்ள இரண்டு விண்மீன்களும் மிக விரைந்து சுற்றி வருவதால் அவற்றின் சுற்றுக் காலம் 2 .9 நாட்களாக உள்ளது. இந்த இரு இரட்டை விண்மீன்களுக்குத்தோற்றத் தொலைவிற்கு அருகில் தோற்றப் பொலி வெண் 9 கொண்ட ஒரு மங்கலான விண்மீன் 2 .7 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. இதுவும் ஏறக்குறைய ஒத்த நிறை கொண்ட செந்நிறமான குறு விண்மீன்களாக ஆனால் குறைந்த அளவே மொத்த நிறை உடைய ,புற வெப்பநிலை 4000 டிகிரி கெல்வின் உடைய M வகை விண்மீன்களால் ஆன இரட்டை விண்மீன்களாகும். 2 .5 மில்லியன் கிலோமீட்டர் இடைத் தொலைவுடன் இவை ஒன்றை ஒன்று 19 .5 மணி நேரத்தில் சுற்றி வருகின்றன. இவை மறைப்பு மாறொளிர் விண்மீன்களாக உள்ளன. இவற்றில் ஒன்றோ அல்லது இரண்டுமோ திடீரென்று ஒளிரும் தன்மையுடையதாக அதாவது திடீரென்று செறிவாக ஆற்றலை உமிழ்வதாக இருக்கின்றன. இந்த ஆறு விண்மீன்களும் ஏறக்குறைய 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. காஸ்டர் A , தீட்டா ஒரியானிஸ்போல ஆறு விண்மீன்களின் தொகுப்பாக உள்ளது இவ் விண்மீனுக்கு கோளும் வாழும் உயிரினங்களும் இருந்தால் அங்குள்ளவர்கள் ஒரே சமயத்தில் 6 சூரியங்களையும் பார்ப்பார்கள் .ஆறு விண்மீன்களைக் கொண்ட காஸ்டர் A யின் கட்டமைப்பை ஓரளவு அறிந்து கொண்டாலும் அவை உருவான தோற்றம் பற்றிய விவர்ணகள் இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றன. போலக்ஸ்(Pollux) போலக்ஸ் ஜெமினி வட்டாரத்தில் பிரகாசமிக்க வின்மீனாகவும் ,விண்ணில் கண்ணுக்குத் தெரிவனவற்றுள் 17 வது பிரகாசமிக்க விண்மீனாகவும் உள்ளது ,இது ஆரஞ்சு நிறங் கொண்ட K வகை பெரு விண்மீனாகும். வெண்மையான காஸ்டரிலிருந்து இது வேறுபட்ட நிறங் கொண்டுள்ளது. போலக்ஸ்சை சுற்றி காந்தப் புலத்தால் கட்டுப்படுத்தப் பட்ட அயனிகளால் ஆன புற மண்டலம் இருப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. இது எக்ஸ் கதிர்களை உமிழும் ஒரு மூலமாக அறியப்பட்டுள்ளது. தமிழர்கள் இதை புனர்பூசம் என அழைப்பர். 34 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது சூரியனைப் போல 32 மடங்கு பிரகாசத்துடனும் சூரியனை விட 10 மடங்கு ஆரமிக்கதாகவும் ,புற வெப்பநிலை 4500 டிகிரி கெல்வின் உடையதாகவும் ,தோற்ற ஒளிப் பொலி வெண் 1 .16 ஆகவும் உள்ளது

No comments:

Post a Comment