Sunday, May 6, 2012

eluthatha kaditham

எழுதாதக் கடிதம் தமிழகத்தில் எங்கும் காளான் முளைத்தது மாதிரி பொறியியல் கல்லூரிகள் தோன்றியுள்ளன.பாலிடெக்னிக் ,கல்வியியல் கல்லூரிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன ஒரே மாதிரியான அறிவும் திறமையும் கொண்ட பலரை உருவாக்குவதால் தேவை இல்லாத போது அவர்கள் தேடப்படுவதில்லை.அவர்கள் அறிவும் திறமையும் வீணாகிப் போகிறது. அதனால் பலரும் பல் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள கடிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் அவர்கள் உழைப்பு சிதறிப் போவதால் ,ஒரு குறிப்பிட்ட துறையில் மேலோங்கிச் சிறப்பதில்லை போட்டாப் போட்டியான உலகத்தில் அவர்கள் முகவரியைத் தொலைத்து விட்டு அங்கும் இங்குமாக அலைகின்றார்கள் .தான் எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும் என்பதைத் தீர்மானித்துத் திட்டமிடத் தெரியாததின் விளைவே இது. சினிமாத் துறை சார்ந்த பயிற்சிக் கல்வி ,மாயக் காட்சிகள்,கிராபிக்,ஒளிப்படம்,ஓவியம்,சிற்பம் போன்ற கலைகள் சார்ந்த பயிற்சிக் கல்வி,படைப்பாற்றல்(மேடைப் பேச்சு,கதை, நாடகம் எழுதுதல்,கவிதை புனைதல்)சார்ந்த பயிற்சிக் கல்வி,கிராமியக் கலைகள் (பொம்மலாட்டம்,கரகம் ,மயிலாட்டம்,,புலியாட்டம் ) சார்ந்த பயிற்சிக் கல்வி ,தொலைக் காட்சிக்கு தயாரித்தல் ,வர்ணனை செய்தல் போன்ற பயிற்சிக் கல்வி இப்படி விதவிதமாகத் திட்டமிடலாம்.இது போன்ற கல்விகளில் போட்டி இல்லாததால் முன்னணி நிறுவனமாக வளர்ச்சி பெறுவது எளிது. வழக்கத்துக்கு மாறான ஒரு புதிய பாடத் திட்டத்துடன் கூடிய கல்வியை அறிமுகப்படுத்த அதற்கென ஒரு தனிக் கல்லூரியை அமைக்க வேண்டும் அரசு மற்றும் பல்கலைக் கழகத்திடமிருந்து அனுமதிவாங்குதல் , பொருள் ஈட்டுதல், இடம் தேர்வு செய்து கட்டடம் எழுப்புதல்,வசதிகளை ஏற்படுத்துதல், பயிற்சியாளர்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்துதல், மேற்பார்வை செய்தல் என்று பல பொறுப்பான வேலைகள் இதற்குப் பின்னால் உள்ளன. இதைத் தனி ஒருவனாகச் செய்வதை விட ஒத்த எண்ணமும், சிந்தனையும் கொண்டவர்கள் கூடிச் செய்வதே மிகுந்த நன்மை தரும். ஒரு அறிமுகக் கூட்டம் மூலம் இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாமே .தேவை ஒரு தலைவர்.

No comments:

Post a Comment