ரீகல்(Rigel)
ஓரியன்வட்டார விண்மீன் கூட்டத்தில் முதலாவது பிரகாசமான விண்மீன் பீட்டா ஒரியானிஸ் என்ற ரீகல் என்று அழைக்கப் படும் விண்மீனாகும் விண்வெளியில் தெரியும் பிரகாசமிக்க விண்மீன்களுள் இது 7 வதாகும். அரேபிய மொழியில் கால் பாதத்தைக் குறிக்கும் சொல்லே ரீகல் என்ற பெயரைத் தந்தது .773 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ரீகல் வெளிறிய நீல நிறங் கொண்ட ,புறப் பரப்பு வெப்ப நிலை 13 ,௦௦௦ டிகிரி கெல்வின் உடைய வெப்ப மிக்க ஒரு விண்மீனாகும். நிறமாலை வகையில் இது B வகையைச் சேர்ந்தது. ரீகலின் நிறமாலையைப் படித்தரமாகக் கொண்டு பல விண்மீன்களை வகைப்படுத்தி உள்ளனர்.
முதன்மைத் தொடர்(Main sequence) விண்மீனாக உள்ள ரீகலின் தோற்ற ஒளிப் பொலி வெண் ௦. 12 ஆகும். இதன் ஒளிர் திறன் சூரியனை விட 23,௦௦௦ மடங்கு அதிகமானது. அளப்பரிய ஒளிர் திறனுக்கும் உயர் வெப்ப நிலைக்கும் அதன் பெரிய உருவ அளவும் ஒரு காரணமாகும். இதன் விட்டம் சூரியனைப் போல 35 மடங்கு பெரியது. பால் வழி மண்டலத்தில்(Milky way) நாமிருக்கும் வட்டாரத்தில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் விண்மீன் ரீகலாகும் சூரியன் இருக்குமிடத்தில் ரீகல் அமைந்திருந்தால் அதன் கோண விட்டம் 35 டிகிரியாகவும் ,ஒளிப் பொலி வெண் - 38 ஆகவும்.ஒளிப் பாயம் 10 KW/s.cm ஆகவும் (சூரியனுக்கு 1 .4 KW/s.cm) இருக்கும் . இதிலிருந்து இதன் ஒளிர் திறனை நன்கு உணரலாம் .
ரீகல் உண்மையில் மூன்று விண்மீன்களின் தொகுப்பாகும் .ரீகலுக்கு மிக நெருக்கமாக உள்ள துணை விண்மீன் 9 வினாடிகள் கோண விலக்கத்துடன் ஒளிப் பொலி வெண் 7 ஆகவும் வெப்ப மிக்க வெண்ணிற விண்மீனாகவும் உள்ளது.இது ரீகலை 10 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. .ரீகலும் ஒரு மாறொளிர் விண்மீனாகும் .
ரீகல் பிரகாசமாக இருப்பதுடன் தனக்கு அருகாமையில் உள்ள நெபுலா ஊடாகவும் இயங்கிச் செல்கிறது.IC 2118 என்று குறிப்பிடப்படுகின்ற சூன்யக்காரக் கிழவித் தலை நெபுலா (Witch head nebula ) வை ஒளி ஊட்டுவது ரீகலாகும் .ஓரியன் நெபுலாவுடனும் ரீகல் இணைந்திருக்கிறது
No comments:
Post a Comment