Tuesday, May 15, 2012

ஓரியன் நெபுலா (Orion Nebula) ஓரியன் வட்டார விண்மீன் கூட்டத்தில் மற்றொரு சிறப்பு அதில் காணப்படும் ஓரியன் நெபுலாவாகும்.இது மனித உடல் தோற்றம் தரும் நாற்கர வடிவம் போன்ற பகுதியில் பெல்ட்டுக்குக் கீழாக கட்டத்தின் மையத்தில் உள்ளது. மங்கலான வெண் மேகம் போன்று வெறும் கண்களுக்குக் கூடத் தெரியும் இதை M.42 மற்றும் NGC 1976 என்று பதிவு செய்துள்ளனர்.பூமியிலிருந்து தெரியும் நெபுலாக்களில் இதுவே மிகவும் பிரகாசமானது.இது முதன் முதலாக 1618 ல் சிசாடஸ் (Ziesatus) endra வானவியலாரால்,வால்மீன்களை ஆராய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்டது.கலிலியோ தன் தொலை நோக்கி மூலம் இந்த வட்டார விண்மீன் கூட்டத்தை ஆராய்ந்த போதும் ஓரியன் நெபுலாவைத் தவறவிட்டு விட்டார்.
இது நம்மிடமிருந்து சுமார் 1500 ஒளி ஆண்டுகள் தொலைவில்,ஒரு சில நூறு ஒளி ஆன்டுகள் குறுக்காக விரிந்துள்ளது.இது சீரற்ற வடிவம் கொண்டது.பொதுவாக அடர்த்திமிக்க பிரகாசமான இதன் பகுதியை மட்டுமே நம்மால் வெறும் கண்ணால் பார்க்க முடிகிறது.இது இந்த வட்டார விண்மீன் கூட்டம் முழுவதையும் கவர்ந்திருக்கிறது. இதன் தோற்ற விட்டம் இரண்டு முழு நிலாவிற்குச் சமமாக உள்ளது. பொதுவாக நெபுலாவில் புது விண்மீன்கள் உருவாவது வழக்கம்.ஓரியன் நெபுலாவும் இதற்கு விதி விலக்கில்லை. நெபுலாவிலுள்ள வளிமங்களையும் தூசிகளையும் ஈர்ப்பால் ஒன்றுதிரட்டி இளம் விண்மீன்கள் இப்பகுதியில் உருவாக்கி வருகின்றன. ஓரியன் நெபுலாவே விண்மீன் வளர்ச்சிப் படிகளில் இறுதிக் கட்டத்தில் இருக்கின்ற நிலையைக் குறிக்கின்றது. நமது சூரியனை விட நிறை மிக்கனவாகவும் ,வெப்ப மிக்கதாகவும் பல விண்மீன்கள் இதில் அடங்கியிருக்கின்றன. .வெப்ப மிக்கவை புற ஊதக் கதிர்களை உமிழ்கின்றன. .இது புற ஊடகத்திலுள்ள அணுக்களையும் மூலக் கூறுகளையும் சிதைத்து ஹைட்ரஜனையும் அயனித்து விடுகிறது. இதுவே நெபுலாவில் எங்கும் விரவியுள்ளது. வெப்பமிக்க அயனிக்கப்பட்ட வளிமம்,கட்புலனறி,அகச் சிவப்பு மற்றும் ரேடியோ அலைநீள நெடுக்கையில் கதிர்வீச்சை உமிழ்கிறது ஓரியன் நெபுலா ஒளிர்வதற்குக் காரணம் அது நாற்கரத்தின் உட்புறமுள்ள தீட்டா ஒரியானிஸால் ஒளிவூட்டப்படுவதே ஆகும்.இதில் அருகருகே அமைந்துள்ள இரு விண்மீன்கள் உள்ளன. அவற்றை தீட்டா 1 என்றும் தீட்டா 2 என்றும் குறிப்பிடுகின்றார்கள்.தீட்டா 1 ஒரியானிஸ் பல விண்மீன்களின் தொகுப்பாகும். இது ஓரியன் நெபுலாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.சிறிய தொலை நோக்கி மூலம் பார்க்கும் போது 5.1,6.7,6.7,8.௦ ஒளிப்பொலிவெண் கொண்ட நான்கு விண்மீன்கள் ஒரு சிறிய நாற்கர வடிவில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. பெரிய திறன் மிகு தொலை நோக்கி இதில் இன்னும் பல விண்மீன்கள் இருப்பதைச் சுட்டிக்கட்டுகின்றது.தீட்டா 2 ஒரியானிஸ் தோற்ற ஒளிப்பொலிவெண் 5.௦, 6.4 கொண்ட இரு விண்மீன்களாலான ஒரு இரட்டை விண்மீன் நெபுலாக்களை பல வகைப் படுத்தியுள்ளனர். அவை விரிபடர் நெபுலா (diffuse)மாறொளிற் நெபுலா (variable), கோளொத்த நெபுலா (Planetary) மற்றும் சூப்பர் நோவா போன்றவையாகும். இவற்றுள் சூப்பர் நோவா தவிர்த்த பிற நெபுளாக்கள் அண்டக நெபுலாக்களாகும் (galactic) ஓரியன் நெபுலா ஒரு விரிபடர் நெபுலாவாகும். பொதுவாக இது போன்ற நெபுலாக்கள் கூடுதலான புறப் பரப்பு ,ஒளிரும் தன்மை, மங்கலாகப் படர்ந்திருக்கின்ற மேகம் போன்ற அமைப்பு ,குறைவான அடர்த்தி,வரையறுக்க இயலாதவாறு எல்லையற்ற தோற்றம் இவற்றுடன் காட்சி தரும். ஓரியன் நெபுலா விற்கு அருகில் கோள வடிவில் மற்றுமொரு நெபுலா காணப்படுகிறது. இதை M 43 என்று பதிவு செய்துள்ளனர். சீட்டா ஒரியானிஸ் லிருந்து டெல்டா ஒரியா னிஸ் எவ்வளவு தோற்றத் தொலைவில் உள்ளதோ அவ்வளவு தொலைவில் M .78 என்ற ஒரு நெபுலா சீட்டா ஒரியானிஸ் - பெடல்சியூஸ் இணை கோட்டில் சீட்டா ஒரியானிஸ் க்கு அருகாமையில் உள்ளது. சீட்டா ஒரியானிசுக்கு அருகில் தெற்குப் பகுதியில் இருண்ட குதிரை முகம் பதிந்த ஒரு நெபுலா(Horsehead nebula) உள்ளது. இது மங்கலான நெபுலாவாகும்.நீண்ட காலத்திற்குப் பதிவு செய்ய அனுமதித்தாலே
இதைப் பதிவு செய்ய முடியும்.குதிரை முகம் போன்ற இருண்ட பகுதி,அப்பகுதியில் வெப்ப மிக்க விண்மீன்கள் இல்லாததால் ஏற்படுகின்றது.இவ்விருண்ட பகுதி அதற்கு அப்பாலுள்ள விண்மீன்கள் உமிழும் ஒளியை உறிஞ்சிக் கொண்டு விடுவதால் அப்படிக் காட்சி யளிக்கின்றன.அதனால் பின்னாலுள்ள விண்மீன்களையும் காண முடிவதில்லை.

No comments:

Post a Comment