எழுதாத கடிதம்
ஆசிரியர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றவேண்டும் .
இல்லாவிட்டால் மாணவர்களிடம் அறிவின்மையோடு ஒழுக்கமின்மையும் வெகு இயல்பாகத் தூண்டப்படும்.
இந்நிலை நிலைப்படும் போது பிற்பாடு ஒட்டு மொத்த
சமுதாயமும் சீரழிந்து போய்விடலாம்.ஏனெனில்
சாகாத சமுதாயத்திற்கு மாணவர்களே சுவாசிக்கப்படும் மூச்சு.சமுதாயத்தின் நலங்காக்கும் ஆசிரியப் பணியை
புனிதமான தெய்வீகப்பணி என்பர்.ஆசிரியர்கள் தத்தம்
பணிகளைச் செவ்வனே செய்துவர எவ்வித புற மற்றும்
அக இடையூறுகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள
வேண்டியது நலமான சமுதாயத்தின் கடமையாகும்.
துறவிகள் புறத் துறவிகளாக இல்லாது அகத் துறவிகளாக
இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் துறந்தவர்களே
துறவிகள்.அவர்கள் தலைமைப் பதவிக்கும்,
சிம்மாசனத்திற்கும்,தங்கக் கிரீடத்திற்கும் ஆசைப்படுவார்களே
ஆனால் நிச்சியம் அவர்கள் புறத்துறவிகளாக மட்டுமே இருக்கமுடியும்.அவர்களால் நிச்சியமாக சீரழிந்து வரும் சமுதாயத்தை சிறிதளவு கூட செம்மைப்படுத்த முடியாது. மடாதிபதிகளாக இருப்பவர்கள் அதன் பொருட்டுக் கிடைக்கும் சுகங்களையும்,அனுகூலங்களையும் தனது உடைமையாக்கிக் கொண்டு மயங்கிக் கிடப்பார்களேயானால்,காலப்போக்கில் மக்களிடம் அறநெறிகள் மறக்கப்பட்டு அதன் பொருளே மாறுபட்டுப் போகும்.இந்நிலை சமுதாயத்தை மீண்டும் சீர்படுத்த முடியாத எல்லைக்கு இட்டுச் செல்லும்.
வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும்.
வாதாடுவது உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கே கிடைக்கும்பொருளுக்காக பொய்களினால் உண்மைகளை மூடி மறைத்து குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பதற்கில்லை.வழக்கில் மறைக்கப்படும் உண்மைகளை வாதாடிவெளிக்கொணர்ந்து உண்மையான குற்றவாளிகளுக்கு
தண்டனை வாங்கிக் கொடுப்பதே அவர்கள் பணி.இவர்கள்
தம் பணியைச் சட்டத்தினால் மட்டுமின்றி தர்மத்தினாலும்
மேற்கொள்ளவேண்டும்.உரைக்கப்படாத உண்மைகளையும் ,உதிர்க்கப்
பட்ட பொய்களையும் வைத்துக் கொண்டு தீர்ப்பு எழுதினால் அது
சமுதாயத்தை அழிக்கும் ஒரு காரணியாகி விடும்
No comments:
Post a Comment