Saturday, May 26, 2012

Vethith Thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் புளூரின்(Fluorine) கண்டுபிடிப்பு புளூரின் மிகவும் தீவிரமாக வினை புரியக்கூடிய,ஹாலஜென் குடும்பத்தைச் சேர்ந்த அறை வெப்ப நிலையில் வளிம நிலையில் இருக்கின்ற ஒரு தனிமமாகும்.மக்கள் புளூரினை அறிவதற்கு முன்னால் அதன் ஒரு கூட்டுப் பொருளான புளூர்ஸபர் (Fluorspar)என்ற கால்சியம் புளூரைடை நன்கு தெரிந்திருந்தனர்.இது நிறமற்ற ஒரு படிகமாகும்.1670 கும் முன்னால் ஜெர்மனியின் ஸ்வாண்டு ஹார்டு (H.Schwandhard)என்பார்,புளூர்ஸபர் கரைந்த அமிலம் கண்ணாடியை அரித்தெடுப் பதைக் கண்டார் ,கண்ணாடியை அரித்தெடுத்தது ஹைட்ரோ புளூரிக் அமிலம் என்றாலும் அப்போ து ஸ்வாண்டு ஹார்டும் பிறரும் அது சிலிசிக் அமிலம் என்று தவறுதலாக முடிவு செய்தனர் ஏறக்குறைய ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு புளூர்ஸ்பைரை ஷீலே என்ற ஆங்கிலேயர் ஆராய்ந்தார் புளூரைடை கந்தக அமிலத்தில் இட்டு சூடுபடுத்த கண்ணாடிக் குடுவை ஒளி ஊடுருவும் பண்பை இழந்ததைக் கண்டார்.இது குடுவையில் தோன்றிய புதிய அமிலத்தின் செயல் என அறிந்தார்.இது ஹைட்ரோ புளூரிக் அமிலம் என்று அறிந்தாலும் சில காலம் குழப்பமாகவே இருந்தது. இந்த அமிலத்தைப் பின்னர் ஆராய்ந்த டேவி ,ஹே லூசாக், லவாய்ச்சியர் மற்றும் தென்னார்டு போன்றவர்கள் இதன் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டார்கள். டேவி இவ்வமிலத்தில் ஒரு புதிய தனிமம் இருக்க வேண்டும் என்றும் அது குளோரினை ஒத்தது என்றும் அறிவித்தார்.அதற்கு புளூரின் என்று பெயரிட்டவரும் இவரே.இலத்தீன் மொழியிலிருந்து பிரஞ்சுக்குப் பெயர்ந்த கலவைப் பொருள் (flux) எனப் பொருள்படும் புளூர் என்ற வார்த்தையே இதற்குப் பெயர் தந்தது.புளூரினுக்குப் பெயரிட்டாலும் டேவியால் அத் தனிமத்தைத் தனித்துப் பிரித்துக் காட்ட முடியவில்லை. ஹைட்ரோ குளோரிக் அமிலம் மின்னார் பகுப்பினால் பிரிவதில்லை என்பதால் அவ் வழிமுறை புளூரினுக்குப் பயனற்றதாக இருந்தது.இறுதியாக 1886 ல் பிரான்சு நாட்டு வேதியியலாரான ஹென்றி மொய்சன்(Moisson) முதன் முதலாக தூய புளூரினைப் பிரித்துக் காட்டினார்.ஹைட்ரஜன் புளூரைடு திண்மத்தை உருக்கி,அது மின்சாரத்தைக் கடத்துவதற்கு எதுவாக பொட்டாசியம் ஹைட்ரஜன் புளூரைடைக் கரைத்து,அதைi மின்னார் பகுப்பிற்கு உட்படுத்த எதிர் மின் வாயில் ஹைட்ரஜனும் நேர் மின் வாயில் புளூரினும் வெளியேறின.1887 ல் மொய்சன் நீர்ம புளூரினை உருவாக்கிக் காட்டினார். பண்புகள் புளூரின் இலேசான மஞ்சளும் பச்சையும் சேர்ந்த நிறமும் ,கடிய நெடியும் கொண் ட ஒரு வளிமம்.இது மிகவும் தீவிரமாக வினை புரியக் கூடியது.என்பதால் மந்த வளிமங்கள் தவிர பிற உலோகங்கள் அலோகங்கள் என எல்லாவற்றுடனும் வினையாற்றுகிறது.இவற்றை புளூரைடு என்பர் இது ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜனுடன் நேரடியாக இணைவதில்லை.இருட்டில் ஹைட்ரஜனுடன் வெடிப்புடன் இணைகிறது. இது தாழ்ந்த வெப்ப நிலையிலும் - 252 டிகிரி C யிலும் நிகழ்கிறது.இவ் வெப்ப நிலையில் புளூரின் திண்மமாகவும்,ஹைட்ரஜன் நீர்மமாகவும் இருக்கின்றன. கார்பன்,போரான்,கந்தகம்,பாஸ்பரஸ் ஐயோடின் போன்ற அலோகங்களும்,கால்சியம்,சோடியம்,பொட்டாசியம் போன்ற உலோகங்களும் இவ்வளிமத்தில் தூண்டுதல் ஏதுமின்றித் தானாக எரிகின்றன. பிற உலோகங்களை சிறிது சூடு படுத்தும் போது இந்த எரிதல் நிகழ்கிறது.நிக்கலும்,செம்பும் சேர்ந்த ஒரு கலப்பு உலோகமான மோனல் உலோகம் புளூரினால் அரிக்கப் படுவதில்லை. புளூரின் வேதிச் சேர்மங்களையும் கூடத்தாக்குகிறது.நீரானது புளூரினால் ஹைட்ரோ புளூரிக் அமிலமாகவும் ஆக்சிஜனால் ஆன ஓசோனாகவும் பகுக்கப்படுகிறது குளோரினை இடப்பெயர்ச்சி செய்கிறது.
F என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய புளூரினின் அணு எண்,9 அணு எடை 19 .வளிமமான இதன் அடர்த்தி இயல் வெளியில் o டிகிரி வெப்ப நிலையில் 1.7 கிகி /கமீ ஆகும் . இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 53 .15 K ,85 .15 K ஆக உள்ளன புளூரின் காற்றை விடச் சற்றே கனமானது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் 0,065 சதவீதம் உள்ளது. இயற்கையில் இதற்கு ஒரே ஒரு நிலையான அணு எண்மம் (isotope) மட்டுமே உள்ளது. இது ஒரு வலிமையான ஆக்சிஜனூட்டியாகும் புளூரின் சிறிய அளவில் கடல் நீரிலும் ,பற்கள் எலும்பு இரத்தம், மூளை போன்ற உடல் பகுதிகளிலும் உள்ளது.

No comments:

Post a Comment