விண்வெளியில் உலா
லிபஸ் (Lepus)
40 விண்மீன்கள் வரை இனமறியப்பட்ட கிரேக்க காலத்திலிருந்தே அறியப்பட்டுள்ள லிபஸ் வட்டார விண்மீன் கூட்டம் ஓரியன் வட்டாரத்தின் வேட்டைக்காரனின் காலடிக்குக் கீழ் உள்ளது. முயல் போன்று கற்பனை செய்யப்பட்டுள்ள இவ்வட்டார விண்மீன்கள் அவனது வேட்டை நாயால் (கானிஸ் மேஜர் வட்டாரம்) பின் தொடர்ந்து வேட்டையாடுவது போலக் கற்பிக்கப் பட்டுள்ளது.
இதிலுள்ள பிரகாசமிக்க விண்மீனான ஆல்பா லிப்போரிஸ் ,அர்நெப்(Arneb) என அழைக்கப்படுகிறது. அர்நெப் என்றால் அரேபிய மொழியில் குழி முயல் எனப் பொருள் .இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் 2.6 ஆக உள்ளது .இது 1280 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது . இது ரீகலுக்கு தெற்கு -தென் கிழக்காக 10 டிகிரி விலக்கத்துடன் காணப்படுகிறது .
30 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள காமா லிப்போரிஸ் ஓர் இரட்டை விண்மீனாகும். இவற்றின் ஒளிப்பொலிவெண் 3 .6 மற்றும் 6.2 ஆகவும் 95 வினாடி விலக்கத்துடனும் உள்ளது.
R லிப்போரிஸ் மீரா வகை மாறொளிர் விண்மீனாகும். இது லண்டன் நகரத்தைச் சேர்ந்த J.R.Hind என்பாரால் 1845 ல் கண்டுபிடிக்கப் பட்டது அழுத்தமான சிவப்பு நிறத்துடன் காணப்படும் இதன் ஒளிப்பொலிவெண் பெரும நிலையில் 6 ஆகவும் சிறும நிலையில் 14 ஆகவும் ,14 மாத கால சுற்றுக் காலத்துடன் மாறுகிறது
M . 79 என்பது ஓரளவு சிறிய கோள வடிவ கொத்து விண்மீன் கூட்டமாகும். தோற்றத்தில் இது ஒளிப் பொலி வெண் 8 உடைய ஒரு விண்மீன் போலக் காட்சி தருகிறது. இது 40000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.
நிகால் (Nihal ) எனப் படும் பீட்டா லிப்போரிஸ் 159 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2 .81 தோற்ற ஒளிப்பொலி
வெண் ணுடனும்,எப்சிலான் (ε ) லிப்போரிஸ் 227 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .19 தோற்ற ஒளிப் பொலி வெண்ணுடனும்
மியூ(μ) லிப்போரிஸ் 184 ஒளி அண்டுகள் தொலைவில் 3 ,29 ஒளிப் பொலி வெண்ணுடனும் சீட் டா(ζ) லிப்போரிஸ் 70 ஒளி அண்டுகள்
தொலைவில் 3 .55 ஒளிப் பொலி வெண்ணுடனும் ஈட்டா லிப்போரிஸ் 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .71 ஒளிப் பொலி வெண்ணுடனும்
டெல்ட்டா(δ) லிப்போரிஸ் 112 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .76 ஒளிப் பொலி வெண்ணுடனும் அமைந்துள்ளன.
1995ல்l ஹபுல் தொலை நோக்கி மூலம் கிளைஸ் 229 (Gliese ) என்ற விண்மீனைக் கண்டறிந்தனர். இது ஒரு இரட்டை விண்மீனாகும்.இதில் குளிர்ச்சியாகவும் சென்னிறத்துடனும் ஒளிரும் ஒரு சிறு விண்மீன் முதன்மை விண்மீனாகவும் GL 229 B என்ற பழுப்பு நிறக் குறுவிண்மீன் துணை விண்மீனாகவும் உள்ளது .இதன் நிறை நமது வியாழன் கோளைப் போல 20 மடங்கு நிறை கொண்டிருக்கலாம் என்று அறிந்துள்ளனர் இதன் நிறை சராசரி கோளின் நிறையை விட அதிகமாக இருப்பதாலும் ,மேலும் வெப்ப மிக்கதாக இருப்பதாலும் இதைக் கோள் என்றும் சராசரி விண்மீனின் வெப்பநிலையை விடக் குளிர்ச்சியாகவும் சிறியதாகவும் இருப்பதால் இதை விண்மீன் என்றும் கருதமுடியவில்லை. இது 10,000 மடங்கு சூரியனை விட மங்கலாகப் பிரகாசிக்கிறது. இன்று வரை அறிந்தனவற்றுள் இதுவே மிகவும் இரட்டை விண்மீன்களில் சுற்றி வரும் மங்கலான விண்மீனாகும். இவ் விண்மீன் பகுதியில் உயரினம் வாழக் கூடிய சூழ்நிலையுடன் கூடிய ஒரு கோள் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இதை GL 581 என்றும் இது 209 ஒளி ஆண்டுகள் தொலைவில் செந்நிற குறு விண்மீனாக உள்ளது என்றும் ,இதில் கோள்கள் இணைந்த குடும்பம் இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment