Sunday, May 6, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் நைட்ரஜன் (Nitrogen) கண்டுபிடிப்பு
வளிமண்டலக் காற்றில் நைட்ரஜனின் செழுமை மிக அதிகமாக 78 % உள்ளது. வளிமண்டலத்தில் இதன் பருமன் ஆக்சிஜனை விட 4 மடங்கு அதிகமாய் உள்ளது . இங்கிலாந்து நாட்டு மருத்துவரான டானியல் ரூதர்போர்டு 1772 ல் நைட்ரஜன் வளிமத்தைக் கண்டுபிடித்தார். தனிம அட்டவணையில் நைட்ரஜன் தொகுதியில் (V. A) உள்ள எல்லாத் தனிமங்களும் உலோகம் அல்லது உலோகம் போன்றதாக இருக்க நைட்ரஜன் மட்டும் வளிம நிலையில் இருக்கின்றது. ஒரு மணி வடிவ ஜாடியில் வளி மண்டலக் காற்றை எடுத்துக் கொண்டு ,அதில் ஒரு பொருளை எரித்து அதிலுள்ள ஆக்சிஜன் முழுவதையும் நீக்கிக் கொண்டார். அதனுள் ஒரு உயிருள்ள எலியை விட,அது ஆக்சிஜன் இல்லா வெளியில் உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டது ,இறுதியில் இறந்தும் போனது. இதன் மூலம் ஆக்சிஜன் நீக்கப் பெற்று எஞ்சிய வளி மண்டலக் காற்றை அவர் நைட்ரஜன் என அழைத்தார் .லத்தீன் மொழிச் சொல்லான நைட்ரியம் ,கிரேக்க மொழியில் நைட்ரஜனாக மாறி இதற்கு மூலமாகி N என்ற குறியீட்டையும் தந்தது.பிரான்சு நாட்டின் லவாச்சியர் இதற்கு அசோட்(azote)எனப் பெயரிட்டார்.'a'என்ற ஒட்டு கிரேக்க மொழியில் எதிர் மறையையும் 'சோ' என்றால் வாழ்க்கை பொருளையும் குறிக்கும்.அசோட் என்றால் வாழ்க்கை இல்லா நிலை என்று பொருள்.ஆக்சிஜன் இல்லாத நைட்ரஜன் வளிமத்தால் மட்டும் வாழ்க்கை நிலைபடாது என்பதால் இந்த வளிமம் முதலில் அப்பெயர் பெற்றது. காற்றை நீர்மமாக்கி அதிலிருந்து நைட்ரஜன் நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல் மூலம் பெறுகின்றார்கள்.நீர்மக் காற்றை கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபடுத்தி,வெவ்வேறு கொதி நிலை உடைய வளிமங்களை ஆவியாக்கி குளிர்வித்து நீர்மமாக்கி செழுமையூட்டிக் கொள்கிறார்கள்.நைட்ரஜனின் கொதி நிலை - 195.8 டிகிரி C ஆகும். காற்று வெளியில் பொட்டாசியம் பைரோ காலேட்டை வைத்து அதிலுள்ள ஆக்சிஜன் மற்றும் கார்பன்டைஆக்சைடை நீக்கி நைட்ரஜன் மட்டும் எஞ்சுமாறு செய்கின்றாகள் வளி மண்டலக் காற்றிலிருந்து பெறப்படும் நைட்ரஜன் தூய்மையானதில்லை.ஏனெனில் அதில் மந்த வளிமங்களான ஆர்கான்,கிரப்பிட்டான் போன்றவை சிறிதளவு கலந்திருக்கும் எனவே தூய நைட்ரஜன் பெற வேதியியல் வினைகளையே அணுக வேண்டியுள்ளது. செம்பையும் நைட்ரிக் அமிலத்தையும் சமவிகிதத்தில் கலக்க நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி ஆகும். இதை சூடுபடுத்தப்பட்ட செம்புத் துருவல்கள் வழியே செலுத்திக் கிடைக்கும் வளிமத்தைச் சேகரிக்க அது நைட்ரஜனாகும்.அமோனியம் நைட்ரேட்டை நீரில் கரைத்துச் சூடுபடுத்தி நைட்ரஜனை எளிதாகப் பெறலாம். பண்புகள் நைட்ரஜன் நிறம்,மணம் சுவையற்ற ஒரு வளிமம் .இது காற்றை விட மிகச்சிறிதளவே இலேசானது. நீரில் மிகச் சிறிதளவே கரைகிறது .இது நச்சுத் தன்மை யற்றது. காற்றில் எரிவதில்லை. எரிதலின்றி வாழ்க்கைக்கு உறுதுணையாகவும் இல்லை.சுண்ணாம்பு நீரைப் பால்போல வெண்மையாக்குவதில்லை. இதன் அணு எண் 7 . அணு நிறை 14.007.அடர்த்தி 1.165 கிகி /கமீ.இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 70.25 ,77.31 K ஆகும். நைட்ரஜன் வினையில் மந்தமாக ஈடுபடுகிறது. சற்று உயர்வெப்ப நிலையில் இது மக்னீசியம்,லித்தியம்,கால்சியம் போன்ற பல உலோகங்களுடன் கூடி நைட்ரைடுகளை உண்டாக்குகின்றது.அது போலவே அலோகமான போரான் சிலிகானுடன் வினை யாற்றுகின்றது .இன்னும் கூடுதலான வெப்ப நிலையில் நைட்ரஜன் ஆக்சிஜனுடன் நேரடியாகக் கூடி அமோனியா மற்றும் நைட்ரிக் ஆக்சைடை உண்டாக்குகின்றது. கார்பன் மின் வில் லின் (Carbon arc)சுடரொளியில் நைட்ரஜனுடன் கூடுகிறது. கந்தகமும்,ஹாலஜன்களும் எந்த வெப்ப நிலையிலும் நைட்ரஜனுடன் கூடுவதில்லை. துருவ ஒளி என்பது சூரியனிலிருந்து வீசப்படும் மின்னேற்றக் கொண்ட துகள்கள்,அயனிகள் வளி மண்டலத்தை ஊடுருவும் போது புவி காந்தப் புலத்தோடு இடையீட்டுச் செயல் புரிந்துவெளிப்படும் ஒளியாகும். நைட்ரஜன் மூலக்கூறு ஆரஞ்சு-சிவப்பு ,நீலம் -பச்சை .நீலம்- வைலட் மற்றும் அவுரி நீலம் போன்ற வண்ணங்களைத் துருவ ஒளியில் தருகிறது.
திண்ம நைட்ரஜன் இரு வேற்றுருக்களைக்(allotropic forms) கொண்டுள்ளது. அவற்றை ஆல்பா ,பீட்டா நைட்ரஜன் என்பர். - 237 டிகிரி C வெப்ப நிலையில் இதன் நிலை மாற்றம் நிகழ்கிறது.

No comments:

Post a Comment