வாசட் (Wasat)
வாசட் என்றழைக்கப்படும் டெல்டா ஜெமினோரம் மிகச் சாதாரணமான ஓர் இரட்டை விண்மீன் .இதிலுள்ள முதன்மை விண்மீன் மஞ்சள் நிறப் பெரு விண்மீனாகவும் ஒளிப்பொலிவெண் 3.5 கொண்டதாகவும் உள்ளது,6.8 வினாடி கோண விலக்கத்துடன்அமைந்துள்ள இதன் துணை விண்மீன்
சிவப்பு நிறத்துடன் சிறியதாகவும்,ஒளிப் பொலி வெண் 8.2 கொண்டதாகவும் உள்ளது.
ஜெமினி வட்டாரத்தில் சிபிட்ஸ்
ஜெமினி வட்டாரத்தில் இரு சிபிட்ஸ் மாறொளிர் விண்மீன் களாக சீட்டா (ζ),ஈட்டா (η)ஜெமினோரம் உள்ளன. மஞ்சள் நிறத்துடன் 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மாபெரும் விண்மீனான சீட்டா ஜெமினோரம் தொலை நோக்கியால் பார்க்கும் போது ஒளிப்பொலிவெண் 8 உடைய ஒரு துணை விண்மீனைக் கொண்ட ஓர் இரட்டை விண்மீனாகத் தெரிகிறது ..இதன் பிரகாசம் 10 நாட்கள் சுற்று முறையில் மாறிமாறி ஒளிரும்போது ஒளிப் பொலி வெண் 3.6 முதல் 4.2 வரை வேறுபடுகிறது. பிரகாசத்தின் ஏற்றத்தாழ்வு சீராக இல்லாமல் அதிலும் நுண்ணிய அளவில் வேறுபாடு காணப்படுகிறது.
350 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஈட்டா ஜெமினோரம் பெருஞ் சிவப்பு மாறொளிர் விண்மீனாகும்.இதன் உருவம் 8 மாத காலச் சுற்று முறையில் விரிந்து சுருங்குகிறது.அப்போது இதன் ஒளிப்பொலிவெண்
3.2-3.9 என்ற நெடுக்கையில் மாற்றம் பெறுகிறது இது ஒரு துடிப்பு விண்மீனாகும்.இது மற்றொரு விண்மீனால் மறைக்கப் படுவதால் மறைப்பு மாறொளிர் விண்மீனாகவும் விளங்குகிறது.இதனால் இதன் பிரகாசம் 3000 நாட்களுக்கு ஒருமுறை ஏற்றத் தாழ்வுடன் மாறொளிர்கிறது.
ஜெமினி வட்டாரத்தில் தனிக் கொத்து விண்மீன் கூட்டம்
இவ் வட்டாரத்தில் M.35 என்ற செறிவுமிக்க தனிக் கொத்து விண்மீன் கூட்டம் 3500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது கஸ்டரிலிருந்து தொடங்கி எப்சிலான் ,மியூ,ஈட்டா மற்றும் அயோட்டா ஜெமினோரம் இவற்றின் தொடரால் நீண்டிருக்கும் வால் நுனியின் இறுதியில் M.35 அமைந்துள்ளது. இறுதியாக உள்ள ஈட்டா மற்றும் அயோட்டா ஜெமினோரம் இவற்றுடன் M.35 ஒரு செங்கோண முக்கோணத் தோற்றம் தருகிறது. இது வானத்தில் ஒரு முழு நிலவின் பரப்பை அடைத்துள்ளது. இதில் 8 மற்றும் அதற்கும் அதிகமான ஒளி பொலி வெண் கொண்ட மங்கலான விண்மீன்கள் இருப்பதைத் தொலை நோக்கியால் காணமுடியும். இதில் குறைந்தது 200 விண்மீன்கள் ஒரு வளைகோட்டில் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.உண்மையில் இக் கொத்து விண்மீன் கூட்டத்தின் சராசரி விட்டம் 23 ஒளி ஆண்டுகள்.இது டாரஸ் கூட்டத்திலுள்ள ஹையடெஸ் கொத்து விண்மீன் கூட்டத்தை விட 20 மடங்கு பெரியது.
No comments:
Post a Comment